Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 7

பாபேல் கோபுரம்

பாபேல் கோபுரம்

பெரிய வெள்ளம் வந்த பிறகு, நோவாவின் மகன்களுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய குடும்பம் பெரிதாகிக்கொண்டே போனது. அதனால், யெகோவா சொன்ன மாதிரியே அவர்கள் வேறு வேறு இடங்களுக்குப் பிரிந்து போனார்கள்.

ஆனால், சில குடும்பங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்கவில்லை. ‘வாருங்கள், நாம் ஒரு நகரத்தைக் கட்டி இங்கேயே தங்கலாம். வானத்தைத் தொடுகிற அளவுக்கு உயரமான ஒரு கோபுரத்தையும் கட்டலாம். அப்போது, நமக்குப் பேரும் புகழும் கிடைக்கும்’ என்று அவர்கள் சொன்னார்கள்.

அவர்கள் செய்தது யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அதனால், அவர்களுடைய வேலையை நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார். அதை எப்படி நிறுத்தினார் தெரியுமா? திடீரென்று, அவர்களை வேறு வேறு மொழிகளில் பேச வைத்தார். அப்போது, ஒருவர் பேசியது இன்னொருவருக்குப் புரியவில்லை. அதனால், அவர்கள் கட்டுவதையே நிறுத்தினார்கள். அவர்கள் கட்டிக்கொண்டிருந்த நகரத்துக்கு பாபேல் என்ற பெயர் வந்தது. பாபேல் என்றால், “குழப்பம்” என்று அர்த்தம். மக்கள் அங்கிருந்து கிளம்பி உலகத்தின் வெவ்வேறு இடங்களுக்குப் போனார்கள். அவர்கள் புதுப்புது இடங்களுக்குப் போனாலும், அங்கேயும் கெட்டதைத்தான் செய்தார்கள். ஆனால், யெகோவாமேல் அன்பு காட்டியவர்கள் யாராவது இருந்தார்களா? அதை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

“தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—லூக்கா 18:14