Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 58

எருசலேம் அழிக்கப்படுகிறது

எருசலேம் அழிக்கப்படுகிறது

யூதா மக்கள் திரும்பத் திரும்ப யெகோவாவை விட்டு விலகி பொய்க் கடவுள்களை வணங்கினார்கள். அவர்களைத் திருத்துவதற்கு யெகோவா பல வருஷங்களாக முயற்சி செய்தார். அவர்களை எச்சரிப்பதற்காக நிறைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். ஆனால் மக்கள் கேட்கவே இல்லை. அவர்களைக் கேலி செய்தார்கள். அவர்களுடைய பொய் வணக்கத்துக்கு யெகோவா எப்படி முடிவு கட்டினார்?

பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் ஒவ்வொரு தேசமாகப் பிடித்துக்கொண்டே வந்தான். எருசலேமை அவன் முதல் தடவை பிடித்தபோது, யோயாக்கீன் ராஜாவையும் பெரிய அதிகாரிகளையும் படைவீரர்களையும் கைத்தொழில் செய்பவர்களையும் பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான். யெகோவாவின் ஆலயத்தில் இருந்த விலைமதிப்புள்ள எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு போனான். பிறகு, சிதேக்கியாவை யூதாவின் ராஜாவாக ஆக்கினான்.

முதலில் சிதேக்கியா நேபுகாத்நேச்சாரின் பேச்சைக் கேட்டு நடந்தார். ஆனால், பக்கத்து தேசங்களில் இருந்தவர்களும் பொய்த் தீர்க்கதரிசிகளும் பாபிலோனை எதிர்க்கும்படி அவரிடம் சொன்னார்கள். ஆனால் எரேமியா அவரை எச்சரித்தார். ‘நீங்கள் பாபிலோனை எதிர்த்தால் யூதா முழுவதும் கொலையும் பஞ்சமும் வியாதியும்தான் இருக்கும்’ என்று சொன்னார்.

எட்டு வருஷங்கள் ஆட்சி செய்த பிறகு, சிதேக்கியா பாபிலோனை எதிர்க்க முடிவு செய்தார். அதற்காக எகிப்திடம் உதவி கேட்டார். அப்போது, எருசலேமைத் தாக்குவதற்காக நேபுகாத்நேச்சார் தன்னுடைய படையை அனுப்பினான். அவனுடைய படை நகரத்தைச் சுற்றிவளைத்தது. எரேமியா சிதேக்கியாவிடம், ‘நீயும் இந்த நகரமும் தப்பிக்க வேண்டுமென்றால், பாபிலோனிடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால், பாபிலோன் ஆட்கள் எருசலேமை எரித்துப்போட்டு உன்னைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போவார்கள் என்று யெகோவா சொல்கிறார்’ என்றார். அதற்கு சிதேக்கியா, ‘சரணடைய முடியாது’ என்று சொல்லிவிட்டார்.

ஒன்றரை வருஷங்கள் கழித்து, பாபிலோன் வீரர்கள் எருசலேமின் மதில்சுவர்களை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தார்கள். நகரத்துக்குத் தீ வைத்தார்கள். ஆலயத்தை எரித்தார்கள். நிறைய பேரைக் கொன்று போட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆட்களைக் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போனார்கள்.

சிதேக்கியா எருசலேமிலிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் பாபிலோன் வீரர்கள் அவரைத் துரத்திக்கொண்டுபோய் எரிகோவுக்குப் பக்கத்தில் பிடித்தார்கள். பிறகு நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் மகன்களை அவருடைய கண் முன்னாலேயே கொன்றுபோட்டான். பிறகு சிதேக்கியாவைக் குருடாக்கி, சிறையில் போட்டான். அவர் அங்கேயே செத்துப்போனார். ஆனால் யெகோவா யூதா மக்களிடம், ‘70 வருஷங்களுக்குப் பிறகு, உங்களை எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போவேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.

பாபிலோனுக்குக் கைதிகளாக போன இளம் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்களா?

“சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.” —வெளிப்படுத்துதல் 16:7