Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2​—⁠முன்னுரை

பகுதி 2​—⁠முன்னுரை

அன்றைக்கு இருந்த உலகத்தை அழிக்க யெகோவா ஏன் ஒரு பெரிய வெள்ளத்தை வர வைத்தார்? மனிதர்கள் படைக்கப்பட்டு கொஞ்ச காலத்திலேயே, யெகோவாவுக்கு எதிரான ஒரு கலகத்தை சாத்தான் ஆரம்பித்தான். ஆதாம், ஏவாள், அவர்களுடைய மகன் காயீன் போன்ற ஆட்கள் சாத்தானின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். ஆபேல், நோவா போன்றவர்கள் யெகோவாவின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். நிறைய பேர் கெட்டவர்களாக இருந்ததால் யெகோவா அன்றைக்கு இருந்த கெட்டவர்கள் எல்லாரையும் அழித்தார். நாம் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை யெகோவா பார்க்கிறார். யெகோவா கெட்டவர்களை ஜெயிக்க விடவே மாட்டார். இந்த விஷயங்களைப் பற்றி இந்தப் பகுதியில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பகுதியில்

பாடம் 3

ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியவில்லை

ஏதேன் தோட்டத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட மரம் ஏன் விசேஷமாக இருந்தது? அந்த மரத்தின் பழத்தை ஏவாள் ஏன் சாப்பிட்டாள்?

பாடம் 4

கோபம் ஆபத்தானது

ஆபேல் கொடுத்த காணிக்கையைக் கடவுள் ஏற்றுக்கொண்டார். ஆனால், காயீன் கொடுத்ததை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப் பார்த்தபோது, காயீனுக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. அதனால், ஒரு மோசமான காரியத்தைச் செய்துவிட்டான்.

பாடம் 5

நோவா கட்டிய பேழை

கெட்ட தேவதூதர்கள் பூமிக்கு வந்து பெண்களைக் கல்யாணம் செய்தார்கள். அவர்களுடைய மகன்கள் ராட்சதர்களாக இருந்தார்கள், அவர்கள் பயங்கர அடாவடித்தனம் செய்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே வன்முறையாக இருந்தது. ஆனால், நோவா அவர்களைப் போல் இல்லை. அவர் கடவுளை நேசித்தார், அவருக்குக் கீழ்ப்படிந்தார்.

பாடம் 6

எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்

ராத்திரி பகலாக 40 நாட்கள் மழை பெய்ததால் பெரிய வெள்ளம் வந்தது. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஒரு வருஷத்துக்கும் மேல் அந்தப் பேழைக்குள் இருந்தார்கள். கடைசியில், அவர்கள் எல்லாரும் வெளியே வந்தார்கள்.