Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 3​—⁠முன்னுரை

பகுதி 3​—⁠முன்னுரை

பெரிய வெள்ளத்துக்குப் பிறகு, யெகோவாவை வணங்கிய ஒருசிலருடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்களில் ஒருவர்தான் ஆபிரகாம். அவர் கடவுளுடைய நண்பராக இருந்தார். அவரை ஏன் கடவுளுடைய நண்பர் என்று பைபிள் சொல்கிறது? உங்கள் பிள்ளைமேல் யெகோவா ரொம்ப அக்கறையாக இருக்கிறார், அவனுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார் என்பதையெல்லாம் அவன் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஆபிரகாம், லோத்து, யாக்கோபு போன்றவர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டார்கள். அதேபோல, நாமும் யெகோவாவிடம் தாராளமாக உதவி கேட்கலாம். யெகோவா தான் சொன்னதையெல்லாம் கண்டிப்பாகச் செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

இந்தப் பகுதியில்

பாடம் 7

பாபேல் கோபுரம்

ஒரு நகரத்தையும் வானத்தைத் தொடுகிற அளவுக்கு ஒரு கோபுரத்தையும் மக்கள் கட்ட ஆரம்பித்தார்கள். கடவுள் ஏன் திடீரென்று அவர்களை வேறு வேறு மொழிகளில் பேச வைத்தார்?

பாடம் 8

ஆபிரகாமும் சாராளும் கீழ்ப்படிந்தார்கள்

ஆபிரகாமும் சாராளும் நகர வாழ்க்கையை விட்டுவிட்டு கானான் தேசத்தில் ஏன் நாடோடிகளாக வாழ்ந்தார்கள்?

பாடம் 9

ஒரு மகன் பிறக்கிறான்!

ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கைக் கடவுள் எப்படி நிறைவேற்றுவார்? எந்த மகன் மூலமாக அதை நிறைவேற்றுவார்? ஈசாக்கு மூலமா, இஸ்மவேல் மூலமா?

பாடம் 10

லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்

சோதோம் கொமோராமீது கடவுள் நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். அந்த நகரங்களை அவர் ஏன் அழித்தார்? லோத்துவின் மனைவியை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும்?

பாடம் 11

விசுவாசத்துக்கு வந்த சோதனை

கடவுள் ஆபிரகாமிடம், ‘தயவுசெய்து உன்னுடைய ஒரே மகனை மோரியாவில் இருக்கிற ஒரு மலையில் எனக்குப் பலி கொடு’ என்று சொன்னார். தன்னுடைய விசுவாசத்துக்கு வந்த சோதனையை ஆபிரகாம் எப்படி சந்திப்பார்?

பாடம் 12

யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது

ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் ஏசா, யாக்கோபு என்ற இரட்டைப் பிள்ளைகள் இருந்தார்கள். ஏசா முதலில் பிறந்ததால் அவனுக்கு விசேஷச் சொத்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு கிண்ணம் கூழுக்காக அவன் ஏன் அதைக் கொடுத்துவிட்டான்?

பாடம் 13

யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்

யாக்கோபுக்கு ஒரு தேவதூதரிடமிருந்து எப்படி ஆசீர்வாதம் கிடைத்தது? அவர் எப்படி ஏசாவோடு சமாதானமானார்?