Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 5​—⁠முன்னுரை

பகுதி 5​—⁠முன்னுரை

இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சீனாய் மலைக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே யெகோவா அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து, அவர்களைத் தன்னுடைய விசேஷ மக்களாக ஆக்கினார். அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தார். சாப்பிடுவதற்கு மன்னா கொடுத்தார், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார், அவர்களுடைய துணிமணிகள் கிழியாமல் பார்த்துக்கொண்டார். யெகோவா இஸ்ரவேலர்களுக்கு ஏன் திருச்சட்டத்தையும் வழிபாட்டுக் கூடாரத்தையும் குருமார்களையும் கொடுத்தார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதும், மனத்தாழ்மையாக நடப்பதும், யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதும் ரொம்ப முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்தப் பகுதியில்

பாடம் 23

யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கு

சீனாய் மலையின் அடிவாரத்தில் கூடாரம் போட்டிருந்தபோது இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு ஒரு வாக்குக் கொடுத்தார்கள்.

பாடம் 24

கொடுத்த வாக்கை மீறினார்கள்

மோசே பத்துக் கட்டளைகளை வாங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரமான ஒரு பாவத்தை மக்கள் செய்தார்கள்.

பாடம் 25

கடவுளை வணங்குவதற்காக ஒரு கூடாரம்

இந்த விசேஷ கூடாரத்தில் ஒப்பந்தப் பெட்டி இருந்தது.

பாடம் 26

பன்னிரண்டு உளவாளிகள்

கானான் தேசத்தை உளவு பார்த்த மற்ற 10 உளவாளிகளைவிட யோசுவாவும் காலேபும் வித்தியாசமாக இருந்தார்கள்.

பாடம் 27

யெகோவாவுக்கு எதிரான கலகம்

கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் 250 பேர் யெகோவாவைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

பாடம் 28

பிலேயாமின் கழுதை பேசுகிறது

பிலேயாமினால் பார்க்க முடியாத ஒருவரை அவனுடைய கழுதை பார்த்துவிட்டது.