Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 7​—⁠முன்னுரை

பகுதி 7​—⁠முன்னுரை

சுமார் 80 வருஷ காலப் பகுதியில், சவுல் மற்றும் தாவீதின் வாழ்க்கையில் நடந்தவற்றை இந்தப் பகுதியில் படிப்போம். சவுல் ஆரம்பத்தில் மனத்தாழ்மையாக இருந்தார், கடவுளுக்குப் பயந்து நடந்தார். ஆனால் சீக்கிரத்தில் மாறிவிட்டார், யெகோவா பேச்சைக் கேட்காமல் போய்விட்டார். யெகோவா அவரை ஒதுக்கிவிட்டு, இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக தாவீதை அபிஷேகம் செய்யும்படி சாமுவேலிடம் சொன்னார். பொறாமை பிடித்த சவுல், தாவீதைக் கொல்ல பல தடவை முயற்சி செய்தார். ஆனால், தாவீது அவரைப் பழிவாங்கவே இல்லை. தாவீதை யெகோவாதான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை சவுலின் மகனான யோனத்தான் புரிந்துகொண்டார். அதனால், அவர் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீது சில மோசமான பாவங்களைச் செய்தார். ஆனால், யெகோவா கண்டித்தபோது அதை ஏற்றுக்கொண்டார். யெகோவாவுக்கும் நம்மை வழிநடத்துகிறவர்களுக்கும் எப்போதும் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள்.

இந்தப் பகுதியில்

பாடம் 39

இஸ்ரவேலின் முதல் ராஜா

இஸ்ரவேலர்களை வழிநடத்த நியாயாதிபதிகளைக் கடவுள் கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டார்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவாக சவுலை சாமுவேல் அபிஷேகம் செய்தார். ஆனால், யெகோவா சவுலை ஒதுக்கிவிட்டார். ஏன்?

பாடம் 40

தாவீதும் கோலியாத்தும்

இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தார். தன்னைத் தேர்ந்தெடுத்தது சரிதான் என்பதை தாவீது நிரூபிக்கிறான்.

பாடம் 41

தாவீதும் சவுலும்

இவர்களில் ஒருவர் ஏன் இன்னொருவரை வெறுக்கிறார்? வெறுப்புக்கு ஆளானவர் எப்படி நடந்துகொள்கிறார்?

பாடம் 42

தைரியமும் உண்மையுமுள்ள யோனத்தான்

ராஜாவின் மகன் தாவீதின் நெருங்கிய நண்பரானார்.

பாடம் 43

தாவீது ராஜா செய்த தவறு

தவறான செயலால் நிறைய பிரச்சினைகள் வருகின்றன.