Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 9​—⁠முன்னுரை

பகுதி 9​—⁠முன்னுரை

யெகோவாமேல் அசைக்க முடியாத விசுவாசம் வைத்த சின்னப் பிள்ளைகள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் பற்றி இந்தப் பகுதி சொல்கிறது. சீரியாவில் இருந்த ஒரு இஸ்ரவேல் சிறுமிக்கு, யெகோவாவின் தீர்க்கதரிசியால் நாகமானைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எதிரி படையிடமிருந்து யெகோவா தன்னைக் காப்பாற்றுவார் என்று எலிசா தீர்க்கதரிசி நம்பினார். தலைமைக் குருவான யோய்தா தன்னுடைய உயிரைக்கூட பெரிதாக நினைக்காமல் இளம் யோவாசை அவனுடைய பாட்டியான பொல்லாத அத்தாலியாள் கையிலிருந்து காப்பாற்றினார். யெகோவா எருசலேமைப் பாதுகாப்பார் என்று எசேக்கியா ராஜா நம்பினார். அதனால் அசீரியர்களின் மிரட்டலுக்குப் பயந்து சரணடையவில்லை. யோசியா ராஜா தன்னுடைய தேசத்திலிருந்து சிலை வணக்கத்தை ஒழித்துக்கட்டினார், ஆலயத்தைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவந்தார், மக்கள் திரும்பவும் உண்மைக் கடவுளை வணங்க உதவினார்.

இந்தப் பகுதியில்

பாடம் 51

மாவீரரும் குட்டிப் பெண்ணும்

இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு குட்டிப் பெண், யெகோவாவின் மகா வல்லமையைப் பற்றி தன் எஜமானியிடம் சொன்னாள். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

பாடம் 52

யெகோவாவின் நெருப்பு போன்ற படை

‘அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்’ என்பதை எலிசாவின் வேலைக்காரர் எப்படிப் புரிந்துகொண்டார்?

பாடம் 53

யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்

உண்மையுள்ள ஆலய குரு ஒருவர், பொல்லாத ராணியை எதிர்க்கிறார்.

பாடம் 54

யோனாவிடம் கடவுள் காட்டிய பொறுமை

கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருவர் எப்படி மீனின் வயிற்றுக்குள் போனார்? எப்படி வெளியே வந்தார்? யெகோவா அவருக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்?

பாடம் 55

யெகோவாவின் தூதர் எசேக்கியாவைக் காப்பாற்றினார்

யெகோவா தன் மக்களைக் காப்பாற்ற மாட்டார் என்று யூதாவின் எதிரிகள் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னது தவறு!

பாடம் 56

யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்

யோசியா எட்டு வயதில் யூதாவின் ராஜாவாக ஆனார். தன்னுடைய மக்கள் யெகோவாவை வணங்க அவர் உதவினார்.