Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 10​—⁠முன்னுரை

பகுதி 10​—⁠முன்னுரை

யெகோவாதான் எல்லாவற்றுக்கும் மேலான ராஜா. இதுவரை அவர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இனிமேலும் அவர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். உதாரணமாக, எரேமியா சாகாதபடி அவரைக் கிணற்றிலிருந்து காப்பாற்றினார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை நெருப்புச் சூளையிலிருந்து காப்பாற்றினார். தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார். எஸ்தர் தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக அவளுடைய உயிரை யெகோவா காப்பாற்றினார். அக்கிரமங்கள் தொடர்ந்து நடப்பதற்கு அவர் விட மாட்டார். யெகோவாவின் அரசாங்கம் எல்லா அக்கிரமங்களையும் நீக்கிவிட்டு இந்தப் பூமியை ஆட்சி செய்யும். பெரிய சிலையையும் பெரிய மரத்தையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் பகுதியில்

பாடம் 57

பிரசங்கிப்பதற்கு எரேமியாவை யெகோவா அனுப்புகிறார்

இளம் எரேமியா சொன்னதைக் கேட்டு ஊர்ப் பெரியவர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது.

பாடம் 58

எருசலேம் அழிக்கப்படுகிறது

யூதா மக்கள் பொய்க் கடவுள்களை வணங்கி வந்ததால் யெகோவா அவர்களை விட்டுவிட்டார்.

பாடம் 59

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த நான்கு பையன்கள்

யூதாவைச் சேர்ந்த இளைஞர்கள் பாபிலோனில் அரண்மனையில் இருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள்.

பாடம் 60

அழியாத ஒரு அரசாங்கம்

நேபுகாத்நேச்சார் பார்த்த வித்தியாசமான கனவுக்கு தானியேல் அர்த்தம் சொன்னார்.

பாடம் 61

அவர்கள் சிலையை வணங்கவில்லை

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் பாபிலோன் ராஜா செய்த தங்கச் சிலையை வணங்க மறுத்தார்கள்.

பாடம் 62

பெரிய மரத்தைப் போன்ற ஒரு ராஜ்யம்

நேபுகாத்நேச்சாருக்கு நடக்கப்போவதை அவனுக்கு வந்த கனவு காட்டியது.

பாடம் 63

சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள்

புரியாத இந்த வார்த்தைகள் எப்போது எழுதப்பட்டன, அவற்றின் அர்த்தம் என்ன?

பாடம் 64

சிங்கக் குகையில் தானியேல்

தானியேல் மாதிரி நீயும் யெகோவாவிடம் தினமும் ஜெபம் செய்!

பாடம் 65

எஸ்தர் தன் மக்களைக் காப்பாற்றுகிறாள்

எஸ்தர் வேறு தேசத்தைச் சேர்ந்தவள். அநாதையாக இருந்த எஸ்தர் ஒரு ராணியானாள்.

பாடம் 66

எஸ்றா திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்

எஸ்றா சொன்னதைக் கேட்ட பிறகு, இஸ்ரவேலர்கள் கடவுளிடம் ஒரு சத்தியம் செய்தார்கள்.

பாடம் 67

எருசலேமின் மதில்சுவர்கள்

எதிரிகள் தங்களைத் தாக்க திட்டம் போட்டிருந்ததை நெகேமியா தெரிந்துகொண்டார். ஆனால் அவர் ஏன் பயப்படவில்லை?