Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 12​—⁠முன்னுரை

பகுதி 12​—⁠முன்னுரை

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதோடு, கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காகவும், அவருடைய அரசாங்கம் வருவதற்காகவும், அவருடைய விருப்பம் பூமியில் நிறைவேறுவதற்காகவும் ஜெபம் செய்யக் கற்றுக்கொடுத்தார். இந்த ஜெபத்தின் அர்த்தத்தையும் அது நம் வாழ்க்கையில் எந்தளவு முக்கியம் என்பதையும் உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். கடவுளுக்கு உண்மையாக நடப்பதிலிருந்து தன்னை விலக்க சாத்தானுக்கு இயேசு இடம் கொடுக்கவில்லை. இயேசு தன் அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் முதல் அங்கத்தினர்களாக ஆனார்கள். அவர்களுக்குச் சில விசேஷப் பொறுப்புகளை கொடுத்தார். உண்மை வணக்கத்துக்காக அவர் எப்படிப் பக்திவைராக்கியத்தைக் காட்டினார் என்று கவனியுங்கள். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். அதனால், நோயாளிகளைக் குணமாக்கினார், பசியாக இருந்தவர்களுக்கு உணவு கொடுத்தார், இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பினார். கடவுளுடைய அரசாங்கம் மக்களுக்கு என்னென்ன செய்யும் என்பதைக் காட்டுவதற்காக இந்த அற்புதங்களைச் செய்தார்.

இந்தப் பகுதியில்

பாடம் 74

இயேசு மேசியாவாக ஆகிறார்

இயேசுதான் கடவுள் அனுப்பிய ஆட்டுக்குட்டி என்று யோவான் ஏன் சொன்னார்?

பாடம் 75

இயேசுவை பிசாசு சோதிக்கிறான்

பிசாசு மூன்று தடவை இயேசுவைச் சோதிக்கிறான். அந்த மூன்று சோதனைகள் என்ன? அதற்கு இயேசு எப்படிப் பதில் கொடுத்தார்?

பாடம் 76

ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

இயேசு ஏன் மிருகங்களை ஆலயத்திலிருந்து விரட்டினார்? காசு மாற்றுகிறவர்களின் மேஜைகளை ஏன் கீழே தள்ளினார்?

பாடம் 77

கிணற்றின் பக்கத்தில் ஒரு பெண்

இயேசு தன்னிடம் பேசியதைப் பார்த்து சமாரியப் பெண் ஏன் ஆச்சரியப்பட்டாள்? வேறு யாரிடமும் சொல்லாத எந்த விஷயத்தை இயேசு அவளிடம் சொன்னார்?

பாடம் 78

இயேசு பிரசங்கிக்கிறார்

‘மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆவதற்கு’ தன்னுடைய சீஷர்கள் சிலரை அவர் கூப்பிட்டார். பிறகு, நல்ல செய்தியைப் பிரசங்கிக்க தன்னுடைய சீஷர்களில் 70 பேருக்குப் பயிற்சி கொடுத்தார்.

பாடம் 79

இயேசு செய்த அற்புதங்கள்

இயேசு எங்கே போனாலும், நோயாளிகள் அவரிடம் வந்தார்கள். அவர்களை இயேசு குணமாக்கினார். இறந்துபோன ஒரு குட்டிப் பெண்ணைக்கூட அவர் உயிரோடு எழுப்பினார்.

பாடம் 80

இயேசுவின் 12 அப்போஸ்தலர்கள்

எதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்? அவர்களுடைய பெயர்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

பாடம் 81

மலைப் பிரசங்கம்

கூடிவந்த மக்களுக்கு முக்கியமான விஷயங்களை இயேசு சொல்லிக்கொடுத்தார்.

பாடம் 82

ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்

எப்படிப்பட்ட விஷயங்களை தன்னுடைய சீஷர்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்?

பாடம் 83

அற்புதமாக உணவு கொடுக்கிறார்

இந்த அற்புதத்திலிருந்து இயேசுவையும் யெகோவாவையும் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

பாடம் 84

தண்ணீர்மேல் இயேசு நடக்கிறார்

இந்த அற்புதத்தைப் பார்த்தபோது சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

பாடம் 85

ஓய்வுநாளில் இயேசு குணமாக்குகிறார்

அவர் அப்படிச் செய்தது ஏன் நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை?

பாடம் 86

லாசருவை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

மரியாள் அழுவதைப் பார்த்ததும் இயேசுவும் அழ ஆரம்பித்தார். ஆனால், அவர்களுடைய அழுகை ஆனந்தமாக மாறியது.