Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 14​—⁠முன்னுரை

பகுதி 14​—⁠முன்னுரை

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பூமியின் தொலைதூர இடங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொன்னார்கள். அவர்கள் எங்கே பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். மக்களின் தாய்மொழியில் பிரசங்கிக்கும் சக்தியை அவர்களுக்கு அற்புதமாகக் கொடுத்தார். யெகோவா அவர்களுக்குத் தைரியத்தையும் பயங்கரமான துன்புறுத்தலைச் சமாளிக்க பலத்தையும் கொடுத்தார்.

ஒரு தரிசனத்தில், யெகோவாவின் மகிமையை அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு காட்டினார். இன்னொரு தரிசனத்தில், பரலோக அரசாங்கம் சாத்தானைத் தோற்கடிப்பதையும் அவனுடைய ஆட்சிக்கு நிரந்தரமாக முடிவுகட்டுவதையும் யோவான் பார்த்தார். இயேசு ராஜாவாக ஆட்சி செய்வதையும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்கிற 1,44,000 பேரையும் அவர் பார்த்தார். இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறுவதையும், மக்கள் எல்லாரும் யெகோவாவைச் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வணங்குவதையும்கூட பார்த்தார்.

இந்தப் பகுதியில்

பாடம் 94

சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது

கடவுளுடைய சக்தி என்ன அற்புதமான திறமையை அவர்களுக்குக் கொடுத்தது?

பாடம் 95

யாராலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை

இயேசுவைக் கொலை செய்த மதத் தலைவர்கள் அவருடைய சீஷர்களின் வாயை அடைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை.

பாடம் 96

சவுலை இயேசு தேர்ந்தெடுக்கிறார்

சவுல் கிறிஸ்தவர்களைப் பயங்கரமாக எதிர்த்தார். ஆனால், சீக்கிரத்தில் எல்லாமே மாறியது.

பாடம் 97

கொர்நேலியுவுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது

யூதராக இல்லாத இவருடைய வீட்டுக்கு பேதுருவைக் கடவுள் ஏன் அனுப்பினார்?

பாடம் 98

கிறிஸ்தவ மதம் பல தேசங்களுக்குப் பரவுகிறது

அப்போஸ்தலன் பவுலும் அவருடைய மிஷனரி தோழர்களும் ரொம்பத் தூரத்தில் இருந்த இடங்களில் பிரசங்க வேலையை ஆரம்பித்தார்கள்.

பாடம் 99

சிறைக்காவலன் கிறிஸ்தவனாக ஆகிறான்

இந்தக் கதையில் பேய், நிலநடுக்கம், வாள் ஆகியவை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?

பாடம் 100

பவுலும் தீமோத்தேயுவும்

இவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். நிறைய வருஷங்கள் ஒன்றுசேர்ந்து கடவுளுக்குச் சேவை செய்தார்கள்.

பாடம் 101

பவுல் ரோமுக்கு அனுப்பப்படுகிறார்

பயணத்தில் நிறைய ஆபத்துகள் வந்தன. என்ன கஷ்டம் வந்தாலும் இந்த அப்போஸ்தலன் சோர்ந்துவிடவில்லை.

பாடம் 102

யோவானுக்குக் கிடைத்த தரிசனங்கள்

எதிர்காலத்தைப் பற்றிய தரிசனங்களை இயேசு அவருக்கு வரிசையாகக் காட்டினார்.

பாடம் 103

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

கடவுளுடைய அரசாங்கம் வரும்போது இந்தப் பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் காட்டுகிறது.