பாடல் 28
யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்
-
1. தே-வா, உம் நண்-பர் யார்?
உம் வீட்-டில் தங்-கு-வார்?
யார் உ-ம-து நட்-பைப் பெ-று-வார்?
உம்-மை நன்-க-றி-வார்?
வே-தம் நே-சிப்-போ-ரே,
விஸ்-வா-சம் வைப்-போ-ரே,
உத்-த-ம-ராய் வாழ்க்-கை வாழ்-வோ-ரே,
உம்-மை நம்-பு-வோ-ரே.
-
2. தே-வா, உம் நண்-பர் யார்?
உம்-மை அ-ணு-கு-வார்?
யார் உம் ம-ன-தை ம-கிழ்-விப்-பார்?
உம் சான்-றைப் பெ-று-வார்?
உம் பேர் பு-கழ்-வோ-ரே,
வே-தம் சொல் கேட்-போ-ரே,
கள்-ள-மில்-லா நெஞ்-சம் உள்-ளோ-ரே,
உண்-மை பே-சு-வோ-ரே.
-
3. எம் பா-ரம் யா-வு-மே
உம் பா-தம் வைப்-போ-மே.
உம் நண்-ப-ராய் நெ-ருங்-கு-வோ-மே,
பா-சம் உ-ணர்-வோ-மே.
உம் நட்-புக்-குத்-தா-னே
நா-ளும் ஏங்-கு-வோ-மே;
உம்-மைப் போல் நண்-பர் யா-ரு-மில்-லை,
ஆம், யா-ரு-மே இல்-லை!
(பாருங்கள்: சங். 139:1; 1 பே. 5:6, 7.)