பாடல் 44
சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்
-
1. கெஞ்-சு-கி-றேன் யெ-கோ-வா-வே
என் ஜெ-பம் கே-ளுங்-கள்.
என் நெஞ்-சில் ஆ-யி-ரம் கா-யங்-கள்,
கொஞ்-சம் பா-ருங்-கள்.
என் ஆ-சை-கள் நி-ரா-சை-யா-கி
என்-னை வாட்-டு-தே.
உம் ம-டி-யில் ஆ-று-தல் பெ-ற
ம-னம் ஏங்-கு-தே.
(பல்லவி)
இ-த-ய-மே நொ-றுங்-கு-தே.
ச-கிக்-க-வே உ-த-வு-மே.
த-விக்-கி-றேன் யெ-கோ-வா-வே.
சக்-தி தா-ரும் நான் வா-ழ-வே!
-
2. என் சோ-கத்-தை சொல்-லி அ-ழ
வார்த்-தை-கள் இல்-லை-யே,
உம் வார்த்-தை-கள் அ-தை சொல்-ல,
நிம்-ம-தி-கொண்-டே-னே.
உம் வார்த்-தை-யால் நம்-பிக்-கை தந்-து,
நி-னைப்-பூட்-டு-மே.
உ-ம-தன்-பு என் உள்-ளத்-தை-வி-டப்
பெ-ரி-தென்-றே!
(பல்லவி)
இ-த-ய-மே நொ-றுங்-கு-தே.
ச-கிக்-க-வே உ-த-வு-மே.
த-விக்-கி-றேன் யெ-கோ-வா-வே.
சக்-தி தா-ரும் நான் வா-ழ-வே!
(பாருங்கள்: சங். 42:6; 119:28; ரோ. 8:26; 2 கொ. 4:16; 1 யோ. 3:20.)