பாடல் 66
நல்ல செய்தியை சொல்வோம்
-
1. நம் பாவம் தீரும் நாளையே கனா கண்டோம்.
நம் தேவன் தந்த வார்த்தையில் பதில் கண்டோம்.
தன் அன்பு பிள்ளை ஏசுவின் உயிர் தந்தார்,
தினம் கரைந்து போகும் வாழ்க்கையை மீட்டார்.
தன் பிள்ளையை தந்தாரே இன்று ராஜாவாய்,
நம் பூமிதானே மாறுமே புது ரோஜாவாய்!
சின்னஞ்சிறு மந்தை ஒன்று மணப்பெண்ணாய்,
தன் செல்லப்பிள்ளை கையில் தேவன் சேர்ப்பாரே!
-
2. இதைப் போல ஓர் நல்ல செய்தி வேறில்லை.
அதை நாம் சொல்ல வேண்டும் பூமியே எல்லை.
நம்மோடு சேர்ந்து தேவதூதர் செல்வாரே,
நம்மோடு எங்கும் நல்ல செய்தி சொல்வாரே.
யெகோவாவின் ஓர் சாட்சியாக வாழ்கின்றோம்,
நம் தேவன் பேரைப் போற்றியே தினம் சொல்கின்றோம்.
இதைவிட பெரும் புகழ் இங்கில்லையே,
எந்நாளும் வாழும் நல்ல செய்தி சொல்வாயே!
(பாருங்கள்: மாற். 4:11; அப். 5:31; 1 கொ. 2:1, 7.)