Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 108

தேவனின் மாறாத அன்பு

தேவனின் மாறாத அன்பு

(ஏசாயா 55:1-3)

  1. 1. மாறுமோ மெய் அன்பு,

    நீங்குமோ நம் தேவன் அன்பு.

    விண்ணை மிஞ்சிடும் பாசத்தால்,

    மண்ணில் மைந்தனை தந்ததால்,

    இன்பமாய் என்றும் வாழலாம்,

    ஜீவ பாதையில் நாளெல்லாம்.

    (பல்லவி)

    ஜீவ தண்ணீர் பாயுதே,

    வந்து தாகம் தீர்ப்போமே.

    தேவன் காட்டும் பேரன்பை,

    நாம் ருசி பார்ப்போமே.

  2. 2. மாறுமோ மெய் அன்பு,

    நம் யெகோவா காட்டும் அன்பு.

    வாக்கு தந்தாரே ஆசையாய்,

    பூர்த்தி செய்தாரே நேர்த்தியாய்.

    மன்னராக்கியே ஏசுவை,

    தேவன் காண்பித்தார் பேரன்பை.

    (பல்லவி)

    ஜீவ தண்ணீர் பாயுதே,

    வந்து தாகம் தீர்ப்போமே.

    தேவன் காட்டும் பேரன்பை,

    நாம் ருசி பார்ப்போமே.

  3. 3. மாறுமோ மெய் அன்பு,

    நம்மை தூண்டும் தூய அன்பு.

    ஆர்வமாய் சத்யம் சொல்லவே,

    தாகம் உள்ளோரை தேடவே.

    நாளும் தைர்யமாய் போதிப்போம்,

    நாமும் உண்மையாய் சேவிப்போம்.

    (பல்லவி)

    ஜீவ தண்ணீர் பாயுதே,

    வந்து தாகம் தீர்ப்போமே.

    தேவன் காட்டும் பேரன்பை,

    நாம் ருசி பார்ப்போமே.

(பாருங்கள்: சங். 33:5; 57:10; எபே. 1:7.)