பாடல் 126
தைரியமாய் இருங்கள்! உறுதியாய் இருங்கள்!
-
1. சக்தியுள்ள சிங்கம் போல
சுற்றி வா நீ உன் வாழ்வில்.
கட்டி வைக்கும் அச்சம் எல்லாம்
கட்டவிழ்த்துப் போடு நீ.
என்ன வந்தாலும் நீ தாங்கிடு,
இன்னல் காற்றை ஓர் கை பார்த்திடு.
(பல்லவி)
காலமெல்லாம் நீ உயிர் வாழ்வாய்,
காலை ஊன்றி நில் நண்பா!
-
2. புத்திசாலி போல நீயும்
சொன்ன பேச்சை கேட்பாயே.
கத்தி போல கூர்மை கொண்டு
க்றிஸ்துவோடு செல்வாயே.
மூப்பர் உன்னைக் காக்கும் வேலியே!
போய்விடாதே வேலி தாண்டியே!
(பல்லவி)
காலமெல்லாம் நீ உயிர் வாழ்வாய்,
காலை ஊன்றி நில் நண்பா!
-
3. காட்டில் உள்ள ஓநாய் கூட்டம்
வேட்டையாடத்தான் பார்க்கும்.
ஒட்டி நாமும் ஒன்றாய் நின்றால்
வெட்டி வீழ்த்தி செல்வோமே.
எட்டுத் திக்கும் நீ வா போகலாம்,
வெற்றி நாளை நாம் போய் சொல்லலாம்.
(பல்லவி)
காலமெல்லாம் நீ உயிர் வாழ்வாய்,
காலை ஊன்றி நில் நண்பா!
(பாருங்கள்: மத். 24:13; எபி. 13:7, 17; 1 பே. 5:8.)