பாடல் 132
என் உயிர் நீ!
-
1. என் உ-யிர் நீ! என் உ-டல் நீ!
என் ம-ன-தில் ம-ழைத்-து-ளி நீ!
பூ-வே என் ஏக்-கங்-கள் தீ-ர
தே-வன் தந்-தார் உன்-னை.
நான் இ-னி-யும் நான் இல்-லை-யே,
நீ-யின்-றி-யே என் வாழ்-வில்-லை-யே!
உள்-ளங்-கள் சேர்ந்-தி-ட நா-மும்
ஓர் இல்-லம் ஆ-கி-றோம்.
கா-த-லே! ‘யா’-வை நாம் சே-விப்-போம்!
அன்-பில் சா-த-லே இல்-லா-மல்-தான்
வாழ்-வோம், வா!
சொன்-ன-து-போல் வாழ்ந்-தி-ருப்-போம்
இன்-ப-மெல்-லாம் நாம் பார்த்-தி-ருப்-போம்.
நம் தே-வன் பேர் பு-கழ் பா-ட
என்-னோ-டு சேர்ந்-தி-ரு, அன்-பே!
(பாருங்கள்: ஆதி. 29:18; பிர. 4:9, 10; 1 கொ. 13:8.)