Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 2அ

எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளுதல்

எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளுதல்

தீர்க்கதரிசனம் என்றால் என்ன?

பைபிளில், “தீர்க்கதரிசனம் சொல்வது” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள நாவா என்ற எபிரெய வினைச்சொல் முக்கியமாக, கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு செய்தியை... நியாயத்தீர்ப்பை... ஒழுக்கம் சம்பந்தமான போதனையை... அல்லது கட்டளையை... அறிவிப்பதைக் குறிக்கிறது. நடக்கப்போகும் ஒன்றைப் பற்றி கடவுள் சொன்ன ஒரு விஷயத்தை அறிவிப்பதையும் குறிக்கலாம். இந்த எல்லா விதங்களிலும் கடவுள் வெளிப்படுத்திய விஷயங்கள் எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களில் இருக்கின்றன.—எசே. 3:10, 11; 11:4-8; 14:6, 7; 37:9, 10; 38:1-4.

தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட விதங்கள்

  • தரிசனங்கள்

  • உதாரணங்கள்

  • நடிப்புகள்

எசேக்கியேல் புத்தகத்தில் தரிசனங்கள், உதாரணங்கள், உவமைகள் மற்றும் நடிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்ட தீர்க்கதரிசன செய்திகள் இருக்கின்றன.

நிறைவேற்றங்கள்

எசேக்கியேல் சொன்ன சில தீர்க்கதரிசனங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைவேற்றங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு அவருடைய மக்கள் திரும்பி வந்தபோது, தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் சிறிய அளவில் நிறைவேறின. இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, அவற்றில் பல தீர்க்கதரிசனங்கள், இப்போதும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன, எதிர்காலத்திலும் நிறைவேறப்போகின்றன.

எசேக்கியேல் தீர்க்கதரிசனங்களில் உள்ள பல அம்சங்கள் நிழல்-நிஜம் அடிப்படையில் நிறைவேறியதாக நாம் முன்பு நினைத்தோம். ஆனால், அந்தத் தீர்க்கதரிசனங்களில் வருகிற ஒரு நபரை... பொருளை... இடத்தை... அல்லது சம்பவத்தை... நிழல் என்றோ, நவீன காலத்தில் அவற்றுக்கு இணையாக இருக்கும் ஒன்றை நிஜம் என்றோ இந்தப் புத்தகம் சொல்வதில்லை. பைபிளில் நேரடியாக சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே அப்படி விளக்குகிறது. * எசேக்கியேல் சொன்ன பல தீர்க்கதரிசனங்கள் எப்படிப் பெரிய அளவில் நிறைவேறும் என்பதைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்கும். எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்களிலிருந்தும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்கள், இடங்கள், சம்பவங்கள் ஆகியவற்றிலிருந்தும் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் இந்தப் புத்தகம் விளக்கும்.

^ பாரா. 12 நிழல்-நிஜம் பற்றிய கூடுதலான தகவலுக்கு காவற்கோபுரம், மார்ச் 15, 2015, பக். 9-11, பாரா. 7-12-ஐயும் பக். 17-18-லுள்ள “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.