Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 10ஆ

‘காய்ந்துபோன எலும்புகளும்’ “இரண்டு சாட்சிகளும்”​—⁠இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு

‘காய்ந்துபோன எலும்புகளும்’ “இரண்டு சாட்சிகளும்”​—⁠இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு

‘காய்ந்துபோன எலும்புகளையும்’ ‘இரண்டு சாட்சிகளையும்’ பற்றிய தீர்க்கதரிசனங்கள் 1919-ல் நிறைவேறின. ‘காய்ந்துபோன எலும்புகளை’ பற்றிய தரிசனம், ஒரு நீண்ட காலப்பகுதியை, அதாவது பல நூற்றாண்டுகளுக்கு நீடித்த ஒரு காலப்பகுதியை, பற்றி முன்னறிவிக்கிறது. கடவுளுடைய மக்களின் ஒரு பெரிய தொகுதி உயிர் பெற்றபோது அந்தக் காலப்பகுதி முடிவடைந்தது. (எசே. 37:2-4; வெளி. 11:1-3, 7-13) ‘இரண்டு சாட்சிகளை’ பற்றிய தீர்க்கதரிசனம் ஒரு சிறிய காலப்பகுதியைக் குறித்தது. கடவுளுடைய ஊழியர்களின் ஒரு சிறிய தொகுதி உயிர் பெற்றபோது, அந்தக் காலப்பகுதி முடிவடைந்தது. இந்தத் தீர்க்கதரிசனம், 1914-ன் கடைசியிலிருந்து 1919-ன் ஆரம்பம்வரையான காலப்பகுதியில் நிறைவேறியது. இரண்டு தீர்க்கதரிசனங்களுமே கடவுளுடைய மக்கள் அடையாள அர்த்தத்தில் உயிர் பெறுவதைப் பற்றிச் சித்தரித்துக் காட்டின. இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களின் நவீன கால நிறைவேற்றம் 1919-ல் நடந்தது. அப்போது, யெகோவா தன்னுடைய ஊழியர்களான பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை ‘எழுந்து நிற்க’ வைத்தார். அதாவது, மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து அவர்களை விடுதலை செய்து திரும்ப நிலைநாட்டப்பட்ட சபையில் கூட்டிச்சேர்த்தார்.—எசே. 37:10.

ஆனால், இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களுக்கு இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் இருப்பதைக் கவனியுங்கள். ‘காய்ந்துபோன எலும்புகளை’ பற்றிய தீர்க்கதரிசனம், பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோர் எல்லாரும் உயிர் அடைவதைப் பற்றி முன்னறிவித்தது. ஆனால், ‘இரண்டு சாட்சிகளை’ பற்றிய தீர்க்கதரிசனம், பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோரில் சிலர் உயிர் அடைவதைப் பற்றி முன்னறிவித்தது. இவர்கள்தான் அமைப்பை வழிநடத்தி வந்தவர்கள்; அதோடு, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமிக்கப்பட்டவர்கள்.—மத். 24:45; வெளி. 11:6. *

“சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன”—எசே. 37:1

  1. கி.பி. 100-க்கு பின்

    இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அடையாள அர்த்தத்தில் கொல்லப்பட்டதால் “சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன”

  2. 1919-ன் ஆரம்பம்

    1919: பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரையும் மகா பாபிலோனிலிருந்து விடுதலை செய்து, திரும்ப நிலைநாட்டப்பட்ட சபையில் அவர்களை யெகோவா கூட்டிச்சேர்த்தபோது ‘காய்ந்துபோன எலும்புகள்’ உயிர் அடைந்தன

‘இரண்டு சாட்சிகள்’—வெளி. 11:3

  1. 1914-ன் முடிவில்

    “துக்கத் துணி” போட்டு பிரசங்கிக்கிறார்கள்

    1914: அந்த ‘இரண்டு சாட்சிகள்’ “துக்கத் துணியை” போட்டுக்கொண்டு மூன்றரை வருஷங்களுக்குப் பிரசங்கித்தார்கள். அந்தக் காலப்பகுதியின் முடிவில், அவர்கள் அடையாள அர்த்தத்தில் கொல்லப்பட்டார்கள்

  2. அடையாள அர்த்தமுள்ள மரணம்

  3. 1919-ன் ஆரம்பம்

    1919: அமைப்பை வழிநடத்தி வந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய தொகுதி, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ சேவை செய்ய நியமிக்கப்பட்டபோது அந்த ‘இரண்டு சாட்சிகள்’ உயிர் அடைந்தார்கள்

^ பாரா. 4 மார்ச் 2016, காவற்கோபுரத்தில்,வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.