Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 13அ

வெவ்வேறு ஆலயங்கள், வெவ்வேறு பாடங்கள்

வெவ்வேறு ஆலயங்கள், வெவ்வேறு பாடங்கள்

தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயம்:

  • பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களுக்காக இதைப் பற்றி எசேக்கியேல் சொல்கிறார்

  • இதில் இருக்கிற பலிபீடத்தில் நிறைய பலிகள் செலுத்தப்படுகின்றன

  • வணக்கத்துக்கான யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை இது சிறப்பித்துக் காட்டுகிறது

  • 1919-ல் மீண்டும் நிலைநாட்டப்பட ஆரம்பித்த தூய வணக்கத்தைப் பற்றி இது முக்கியமாகச் சொல்கிறது

மாபெரும் ஆன்மீக ஆலயம்:

  • எபிரெய கிறிஸ்தவர்களுக்காக இதைப் பற்றி பவுல் விளக்குகிறார்

  • இதில் இருக்கிற பலிபீடத்தில் “எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” ஒரேவொரு பலி செலுத்தப்படுகிறது (எபி. 10:10)

  • கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றி இது விளக்குகிறது. வழிபாட்டுக் கூடாரமும், ஆலயங்களும் ரொம்பக் காலமாகவே இதற்கு அடையாளமாக இருந்தன

  • கி.பி. 29 முதல் கி.பி. 33 வரை மிகப் பெரிய தலைமைக் குருவான கிறிஸ்து செய்த வேலையைப் பற்றி இது முக்கியமாகச் சொல்கிறது