Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 18அ

மாபெரும் போரைப் பற்றி யெகோவா எச்சரிக்கிறார்

மாபெரும் போரைப் பற்றி யெகோவா எச்சரிக்கிறார்

ஒரு மாபெரும் போரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கின்றன. தன்னையும் தன் மக்களையும் எதிர்க்கிறவர்களை அந்தப் போரில் யெகோவா அழிப்பார் என்று அவை சொல்கின்றன. அவற்றில் சில தீர்க்கதரிசனங்கள் கீழே உள்ளன. அவற்றுக்கு இடையிலுள்ள ஒற்றுமைகளைப் பாருங்கள். அவற்றைக் கேட்கவும், அவற்றின்படி நடக்கவும் யெகோவா எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

பூர்வ இஸ்ரவேலின் காலத்தில்

எசேக்கியேல்: “‘என்னுடைய எல்லா மலைகளிலும் கோகுவுக்கு எதிராக ஒரு வாளை வர வைப்பேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”—எசே. 38:18-23.

எரேமியா: “எல்லா மனுஷர்களுக்கும் [யெகோவாவே] தீர்ப்பு சொல்வார். கெட்டவர்களை வாளுக்குப் பலியாக்குவார்.”—எரே. 25:31-33.

தானியேல்: ‘பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். . . . அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிடும்.’—தானி. 2:44.

முதல் நூற்றாண்டில்

இயேசு: “அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை.”—மத். 24:21, 22.

பவுல்: “இயேசு . . . தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு . . . கடவுளைப் பற்றித் தெரியாதவர்களை . . . பழிவாங்குவார்.”—2 தெ. 1:6-9.

பேதுரு: “யெகோவாவின் நாள் திருடன் வருவதுபோல் வரும். . . . பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எரிந்து நாசமாகும்.”—2 பே. 3:10.

யோவான்: “தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள் ஒன்று [இயேசுவின்] வாயிலிருந்து வெளிப்பட்டது.”—வெளி. 19:11-18.

இந்தக் காலத்தில்

வேறு எந்தப் புத்தகத்தையும்விட பைபிள்தான் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது, பரவலாக வினியோகிக்கப்பட்டிருக்கிறது

யெகோவாவின் நவீன கால ஊழியர்கள் . . .

  • பைபிள் சம்பந்தமான கோடிக்கணக்கான பிரசுரங்களை நூற்றுக்கணக்கான மொழிகளில் வினியோகிக்கிறார்கள்

  • ஒவ்வொரு வருஷமும் கோடிக்கணக்கான மணிநேரங்களைப் பிரசங்க வேலையில் செலவிடுகிறார்கள்