Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 21அ

“ஒரு பகுதியை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்”

“ஒரு பகுதியை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்”

எசேக்கியேல் 48:8

தேசத்தின் ஒரு பாகத்தை யெகோவா தனியாக ஒதுக்கி வைக்கிறார். அந்தப் பாகத்தை எசேக்கியேல் கூர்ந்து கவனிக்கிறார். அதில் ஐந்து பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளையும் அவற்றுக்கான நோக்கத்தையும் பற்றி இப்போது பார்க்கலாம்.

அ. ‘காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகிற பகுதி’

அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. அதனால் இது “நிர்வாகத்துக்கான பகுதி” என அழைக்கப்படுகிறது.

எசே. 48:8

ஆ. காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகிற ‘மொத்த நிலம்’

இது, குருமார்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் நகரத்துக்காகவும் ஒதுக்கி வைக்கப்படுகிறது. 12 கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் யெகோவாவை வணங்குவதற்காகவும் நிர்வாக ஏற்பாட்டுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும் இந்தப் பகுதிக்கு வருகிறார்கள்.

எசே. 48:20

இ. “தலைவருடைய பகுதி”

“இஸ்ரவேலில் இந்தப் பகுதிதான் தலைவருடைய சொத்தாக இருக்கும்.” “அது தலைவருக்காகக் கொடுக்கப்படும்.”

எசே. 45:7, 8; 48:21, 22

ஈ. “பரிசுத்த காணிக்கை”

மேல்பகுதி ‘லேவியர்களுக்காக’ ஒதுக்கப்படுகிறது. இது, “பரிசுத்தமானது.” நடுப்பகுதி “குருமார்களுக்கான பரிசுத்த காணிக்கையாக இருக்கும்.” “அங்கே அவர்களுடைய வீடுகளும் ஆலயத்துக்கான பரிசுத்த இடமும் [அதாவது, ஆலயம்] இருக்கும்.”

எசே. 45:1-5; 48:9-14

உ. “மீந்திருக்கும் பகுதி”

இது “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொந்தமாக இருக்கும்.” இது “பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்படும்.” இங்கே “வீடுகளும் மேய்ச்சல் நிலங்களும் இருக்கும்.”

எசே. 45:6; 48:15-19