Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 3

கேள்விகளைப் பயன்படுத்துவது

கேள்விகளைப் பயன்படுத்துவது

மத்தேயு 16:13-16

சுருக்கம்: ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அது குறையாதபடி பார்த்துக்கொள்வதற்கும், நியாயங்காட்டிப் பேசுவதற்கும், முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்கும் சாதுரியமான கேள்விகளைக் கேளுங்கள்.

எப்படிச் செய்வது?

  • ஆர்வத்தைத் தூண்டுங்கள், அது குறையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டுகிற அல்லது ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்விகளைக் கேளுங்கள்.

  • நியாயங்காட்டிப் பேசுங்கள். நீங்கள் எடுத்துச்சொல்லும் விஷயத்தைப் புரிந்துகொண்டு, தாங்களாகவே நியாயமான முடிவுக்கு வர கேட்பவர்களுக்கு உதவுங்கள்; அதற்கு அவர்களிடம் அடுத்தடுத்து சில கேள்விகளைக் கேளுங்கள்.

  • முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துங்கள். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு, ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். ஒரு முக்கியக் குறிப்பை விளக்கிய பிறகு அல்லது பேச்சை முடிப்பதற்கு முன்பு மறுபார்வைக் கேள்விகளைக் கேளுங்கள்.