Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 5

திருத்தமாக வாசிப்பது

திருத்தமாக வாசிப்பது

1 தீமோத்தேயு 4:13

சுருக்கம்: எழுத்தில் இருப்பதை அப்படியே சத்தமாக வாசியுங்கள்.

எப்படிச் செய்வது?

  • நன்றாகத் தயாரியுங்கள். அந்தப் பதிவு ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். வார்த்தைகளைத் தனித்தனியாக வாசித்துப் பழகாதீர்கள்; சேர்த்து வாசிக்க வேண்டிய வார்த்தைகளைச் சேர்த்து வாசித்துப் பழகுங்கள். நீங்களாகவே வார்த்தைகளைப் புதிதாகப் போட்டு வாசிக்காதபடியும், வார்த்தைகளை விழுங்கிவிடாதபடியும், மாற்றி வாசிக்காதபடியும் கவனமாக இருங்கள். எல்லா நிறுத்தக் குறிகளையும் கவனியுங்கள்.

  • ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக உச்சரியுங்கள். ஒரு வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அகராதியில் பாருங்கள், அல்லது அந்தப் பிரசுரத்தின் ஆடியோ பதிவைக் கேளுங்கள், அல்லது நன்றாக வாசிக்கத் தெரிந்த ஒருவரிடம் கேளுங்கள்.

  • தெளிவாக வாசியுங்கள். தலையை நிமிர்த்தி, வாயை நன்றாகத் திறந்து, வார்த்தைகளைக் கவனமாக உச்சரியுங்கள். அவற்றிலுள்ள எழுத்துக்களை விழுங்கிவிடாதீர்கள்.