Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 04

கடவுள் யார்?

கடவுள் யார்?

காலம் காலமாகவே மனிதர்கள் நிறைய தெய்வங்களை வணங்கியிருக்கிறார்கள். ஆனால், “மற்ற எல்லா கடவுள்களையும்விட . . . மிக மிக உயர்ந்த” ஒரு கடவுளைப் பற்றி பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 2:5) அவர் யார்? மற்ற எல்லா தெய்வங்களையும்விட அவர் ஏன் உயர்ந்தவர்? அவரைப் பற்றி அவரே நம்மிடம் என்ன சொல்லியிருக்கிறார்? இதையெல்லாம் இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.

1. கடவுளுடைய பெயர் என்ன? அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறாரா?

பைபிளில் கடவுளே நம்மிடம் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்: “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.” (ஏசாயா 42:5, 8-ஐ வாசியுங்கள்.) “யெகோவா” என்ற பெயர் எபிரெய மொழியிலிருந்து வந்திருக்கிறது. அதன் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்” என்று நிறைய நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்தப் பெயரை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். (யாத்திராகமம் 3:15) இதை நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்? அவர் தன்னுடைய பெயரை 7000 தடவைக்கும் மேல் பைபிளில் பதிவு செய்திருக்கிறார்! a யெகோவா என்ற பெயருள்ளவர்தான் ‘மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உண்மைக் கடவுள்.’​—உபாகமம் 4:39.

2. யெகோவாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

மனிதர்கள் எவ்வளவோ கடவுள்களை வணங்கினாலும், யெகோவா மட்டும்தான் ஒரே உண்மையான கடவுள் என்று பைபிள் சொல்கிறது. ஏன்? அதற்கு சில முக்கியமான காரணங்களைப் பார்க்கலாம். யெகோவா மட்டும்தான் “இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.” அதாவது, இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக அதிகாரம் அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. (சங்கீதம் 83:18-ஐ வாசியுங்கள்.) அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள். அதாவது, அவர் என்ன செய்ய நினைத்தாலும் அதைச் செய்ய அவருக்கு சக்தி இருக்கிறது. அவர்தான் ‘எல்லாவற்றையும் படைத்தார்.’ அதாவது, இந்தப் பிரபஞ்சத்தையும் இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிர்களையும் படைத்தார். (வெளிப்படுத்துதல் 4:8, 11) அதோடு, யெகோவாவுக்கு மட்டும்தான் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.​—சங்கீதம் 90:2.

ஆராய்ந்து பார்க்கலாம்!

கடவுளுடைய சொந்தப் பெயருக்கும் காரணப் பெயர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவருடைய சொந்தப் பெயரை உங்களுக்கு எப்படிச் சொல்லியிருக்கிறார்? ஏன் சொல்லியிருக்கிறார்? இப்போது பார்க்கலாம்.

3. கடவுளுக்குப் பல காரணப் பெயர்கள் இருந்தாலும், சொந்தப் பெயர் ஒன்றுதான்

ஒருவருடைய சொந்தப் பெயருக்கும் காரணப் பெயர்களுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வதற்கு, வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுளுடைய சொந்தப் பெயருக்கும் “ஆண்டவர்,” “கர்த்தர்” போன்ற காரணப் பெயர்களுக்கும் என்ன வித்தியாசம்?

மக்கள் நிறைய தெய்வங்களை வணங்குகிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. யாத்திராகமம் 18:11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • “எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்” யார்?

4. தன் பெயரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்

இதை எப்படிச் சொல்லலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • தன் பெயரை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புவதாக நினைக்கிறீர்களா? ஏன்?

தன்னுடைய பெயரை எல்லாரும் பயன்படுத்த வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார். ரோமர் 10:13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவின் பெயரை நாம் பயன்படுத்துவது ஏன் முக்கியம்?

  • யாராவது உங்கள் பெயரை ஞாபகம் வைத்து அதைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

  • நீங்கள் யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தும்போது அவருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

5. யெகோவா உங்கள் நண்பராக வேண்டுமென்று விரும்புகிறார்

சோட்டென் என்ற பெண் கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டபோது புல்லரித்துப்போனார். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டபோது சோட்டெனின் வாழ்க்கை எப்படி மாறியது?

நீங்கள் ஒருவருடைய நண்பராவதற்கு முன்பு அவருடைய பெயரை முதலில் கேட்டுத் தெரிந்துகொள்வீர்கள். யாக்கோபு 4:8-ன் முதல் பகுதியைப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?

  • கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது அவரிடம் நெருங்கிப்போக உங்களுக்கு எப்படி உதவும்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுளை என்ன பேர் சொல்லி கூப்பிட்டாலும் தப்பில்ல.”

  • கடவுளுடைய பெயர் யெகோவாதான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

  • கடவுளுடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

சுருக்கம்

உண்மையான கடவுளின் பெயர் யெகோவா. அந்தப் பெயரை நாம் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அப்போதுதான் நாம் அவருடைய நண்பராக முடியும்.

ஞாபகம் வருகிறதா?

  • மக்கள் வணங்குகிற எல்லா தெய்வங்களையும்விட யெகோவா ஏன் உயர்ந்தவராக இருக்கிறார்?

  • நாம் ஏன் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டும்?

  • யெகோவா உங்களுடைய நண்பராக வேண்டுமென்று ஆசைப்படுகிறார் என்பதை எப்படிச் சொல்லலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான ஐந்து முக்கியமான காரணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“கடவுள் இருக்கிறாரா?” (ஆன்லைன் கட்டுரை)

கடவுளுக்கு ஆரம்பமே இல்லை என்று நம்புவது ஏன் நியாயம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“கடவுளை யார் படைத்தது?” (காவற்கோபுரம், அக்டோபர் 1, 2014)

கடவுளுடைய பெயரை ஆரம்பத்தில் எப்படி உச்சரித்தார்கள் என்று நமக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும், அவருடைய பெயரை நாம் பயன்படுத்துவது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“யெகோவா யார்?” (ஆன்லைன் கட்டுரை)

கடவுளை என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுகிறோம் என்பது முக்கியமா? அவருக்கு ஒரேவொரு சொந்தப் பெயர்தான் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

“கடவுளுக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன?” (ஆன்லைன் கட்டுரை)

a கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைப் பற்றியும், அந்தப் பெயர் ஏன் சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் இல்லை என்பதைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் இணைப்பு A4-ஐப் பாருங்கள்.