Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 12

தடைகளைத் தாண்டி படியுங்கள்

தடைகளைத் தாண்டி படியுங்கள்

பைபிள் படிப்பது ஒரு சந்தோஷமான பயணம் மாதிரி. வழியில் சில தடைகள் வரலாம். பயணத்தை நிறுத்திவிடலாமா என்றுகூட நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். ஆனாலும், தொடர்ந்து பயணம் செய்வது ஏன் நல்லது? தடைகளையெல்லாம் தாண்டுவதற்கு எது உதவி செய்யும்?

1. பைபிளைப் படிப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

பைபிள் ஒரு அற்புதமான புத்தகம். “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.” (எபிரெயர் 4:12) அதைப் படிக்கும்போது, கடவுள் என்ன யோசிக்கிறார் என்றும், உங்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும் தெரிந்துகொள்வீர்கள். உங்களுக்கு அறிவு மட்டுமல்லாமல், உண்மையான ஞானமும் நம்பிக்கையும்கூட கிடைக்கும். அதைவிட முக்கியமாக, உங்களால் யெகோவாவின் நண்பராக முடியும். மொத்தத்தில், பைபிளைப் படிப்பதால் உங்கள் வாழ்க்கையே சந்தோஷமாகிவிடும்!

2. பைபிளின் மதிப்பைப் புரிந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்?

பைபிளில் இருக்கிற உண்மைகள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவை. அதனால்தான், “சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:23) பைபிளில் இருக்கிற உண்மைகளின் மதிப்பை நாம் புரிந்துகொண்டால், என்னதான் தடைகள் வந்தாலும் தொடர்ந்து பைபிளைப் படிப்போம்.​—நீதிமொழிகள் 2:4, 5-ஐ வாசியுங்கள்.

3. பைபிளைத் தொடர்ந்து படிக்க எந்த விதங்களில் யெகோவா உங்களுக்கு உதவுவார்?

யெகோவா எல்லா சக்தியும் உள்ளவர், உங்களுக்கு உயிர் கொடுத்தவர், உங்களுடைய நண்பர். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார். அவர் உங்களுக்கு “ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுப்பார். (பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், பைபிளைப் படிப்பதற்கோ அது சொல்கிறபடி நடப்பதற்கோ உங்களுக்கு இன்னும் ஊக்கம் தேவைப்பட்டால் யெகோவா அதைக் கொடுப்பார். அதுமட்டுமல்ல, தடைகளை அல்லது எதிர்ப்பை சமாளிக்க இன்னும் அதிக பலம் தேவைப்பட்டால் அதையும் அவர் கொடுப்பார். அதனால், தொடர்ந்து பைபிளைப் படிப்பதற்கு எப்போதும் அவரிடம் உதவி கேளுங்கள்.​—1 தெசலோனிக்கேயர் 5:17.

ஆராய்ந்து பார்க்கலாம்!

உங்களுக்கு நேரமே இல்லாத அளவுக்கு வேலைகள் இருந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும் எப்படித் தொடர்ந்து பைபிளைப் படிக்கலாம்? அதற்கு யெகோவா எப்படி உதவி செய்வார்? இப்போது பார்க்கலாம்.

4. பைபிளைப் படிப்பதற்கு முதலிடம் கொடுங்கள்

சிலசமயம், நாம் ரொம்ப வேலையாக இருப்பதால் பைபிளைப் படிப்பதற்கு நேரமே இல்லாததுபோல் தெரியலாம். அப்போது என்ன செய்வது? பிலிப்பியர் 1:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • வாழ்க்கையில் எதெல்லாம் “மிக முக்கியமான காரியங்கள்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் எப்படி முதலிடம் கொடுக்கலாம்?

  1. ஒரு பக்கெட்டில் முதலில் மண்ணைப் போட்டுவிட்டுப் பிறகு கற்களை வைக்க முயற்சி செய்தால் அவற்றை வைக்க முடியாது

  2. ஆனால், முதலில் கற்களை வைத்துவிட்டால் மண்ணையும் பெரும்பாலும் நிரப்பிவிட முடியும். அதேபோல், ‘மிக முக்கியமான காரியங்களை’ முதலில் செய்து முடித்துவிட்டால் மற்ற விஷயங்களைச் செய்வதற்கும் உங்களுக்கு நேரம் இருக்கும்

நம் ஆன்மீகத் தேவையை, அதாவது ஆன்மீக விஷயங்களில் நமக்கு இருக்கிற ஆர்வப்பசியை, பைபிள் பூர்த்தி செய்யும். மத்தேயு 5:3-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பைபிளைப் படிப்பதற்கு முதலிடம் கொடுத்தால் என்ன நன்மை கிடைக்கும்?

5. எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து படியுங்கள்

சிலசமயம், பைபிளைப் படிக்க வேண்டாமென்று யாராவது உங்களிடம் சொல்லலாம். பிரான்செஸ்கோவின் உதாரணத்தைப் பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • பைபிள் படிப்பது பற்றி பிரான்செஸ்கோ சொன்னபோது அவருடைய நண்பர்களும் குடும்பத்தாரும் என்ன செய்தார்கள்?

  • அவர் விடாமல் பைபிளைப் படித்ததால் என்ன பலன் கிடைத்தது?

2 தீமோத்தேயு 2:24, 25-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நீங்கள் பைபிள் படிப்பதைப் பற்றி உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் நண்பர்களும் என்ன சொல்கிறார்கள்?

  • நீங்கள் பைபிளைப் படிப்பது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ஏன்?

6. யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவுவார்

நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போகப் போக, அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதிகமாகும்.ஆனால், யெகோவா எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது சிலருக்குக் கஷ்டமாகத் தெரியலாம். உங்களுக்கும் அப்படித்தானா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள். யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வார். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்வதற்கு ஜிம் என்ன மாற்றங்களைச் செய்தார்?

  • அவருடைய அனுபவத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?

எபிரெயர் 11:6-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவை “ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு,” அதாவது அவரைத் தெரிந்துகொள்ளவும் சந்தோஷப்படுத்தவும் ஊக்கமாக முயற்சி செய்கிறவர்களுக்கு, அவர் என்ன செய்வார்?

  • பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சியைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “பைபிள ஏன் படிக்கிறீங்க?”

  • நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சுருக்கம்

பைபிளைப் படிப்பது எப்போதுமே சுலபம் இல்லை என்றாலும், இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ்வதற்கு அது உதவும். யெகோவாவிடம் எப்போதும் உதவி கேளுங்கள், அவர் நிச்சயம் உதவுவார்.

ஞாபகம் வருகிறதா?

  • பைபிளில் இருக்கிற உண்மைகளை நீங்கள் ஏன் மதிக்கிறீர்கள்?

  • ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ நீங்கள் எப்படி முதலிடம் கொடுக்கலாம்?

  • விடாமல் பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் ஏன் யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

நேரத்தை சரியாகப் பயன்படுத்த நிறைய பேருக்கு உதவி செய்திருக்கும் நான்கு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்” (விழித்தெழு!, ஏப்ரல் 2014)

ஒரு பெண் பைபிளைப் படித்தார். ஆனால், அவருடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. யெகோவா எப்படி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தார் என்று பாருங்கள்.

கவலைகளைச் சமாளிக்க யெகோவா உதவி செய்வார் (5:05)

ஒரு மனைவியின் விடாமுயற்சியினால் அவருடைய கணவர் எப்படிப் பயன் அடைந்தார் என்று பாருங்கள்.

பைபிளை கூண்டில் ஏற்றினேன் (6:30)

யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களைப் பிரிப்பதாகச் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அது உண்மையா?

“யெகோவாவின் சாட்சிகள் குடும்பத்தைப் பிரிக்கிறவர்களா அல்லது குடும்பத்தைப் பலப்படுத்துகிறவர்களா?” (ஆன்லைன் கட்டுரை)