Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 13

கடவுளை அவமதிக்கும் மதங்கள்

கடவுளை அவமதிக்கும் மதங்கள்

பெரும்பாலான மதங்கள் அன்பான கடவுளை வணங்குவதாகச் சொன்னாலும், அக்கிரமம் செய்கின்றன. கடவுள் விரும்புகிறபடி நடக்காமல் அவரை அவமதிக்கின்றன. எப்படி? அதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்? அவர் என்ன செய்யப்போகிறார்?

1. மதங்களின் பொய்ப் போதனைகள் எப்படிக் கடவுளை அவமதிக்கின்றன?

இன்று மதங்கள் கடவுளைப் பற்றிய உண்மைகளைச் சொல்லித்தருவதற்குப் பதிலாகப் பொய்களைச் சொல்லித்தருகின்றன. (ரோமர் 1:25) அவை உண்மையான கடவுளுடைய பெயரை மக்களுக்குச் சொல்வதில்லை. ஆனால், அந்தப் பெயரை நாம் பயன்படுத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 10:13, 14) ஏதாவது மோசமான சம்பவம் நடக்கும்போது, அது கடவுளுடைய சித்தம் என்று சில மதத் தலைவர்கள் சொல்கிறார்கள். அது சுத்தப் பொய். எந்த மோசமான சம்பவத்துக்கும் கடவுள் காரணம் கிடையாது. (யாக்கோபு 1:13-ஐ வாசியுங்கள்.) இதுபோன்ற பொய்கள் மக்களைக் கடவுளிடமிருந்து பிரித்திருப்பது வருத்தமான விஷயம்!

2. மதங்களின் கெட்ட செயல்கள் எப்படிக் கடவுளை அவமதிக்கின்றன?

மக்களை யெகோவா அன்பாக நடத்துகிறார். ஆனால், மதங்கள்? அவற்றின் “பாவங்கள் பரலோகம்வரை எட்டியிருக்கின்றன.” (வெளிப்படுத்துதல் 18:5) உதாரணத்துக்கு, அவை காலம்காலமாக அரசியலிலும் போரிலும் பங்கெடுத்திருக்கின்றன, எத்தனையோ மக்களின் சாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்திருக்கின்றன. சில மதத் தலைவர்கள் மக்களுடைய பணத்தைச் சுரண்டி ஆடம்பரமாக வாழ்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, அவர்களுக்குக் கடவுளைப் பற்றியே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்கும்போது, கடவுளைப் பற்றிப் பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?—1 யோவான் 4:8-ஐ வாசியுங்கள்.

3. இப்படிப்பட்ட மதங்களைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்?

மதங்கள் செய்வதைப் பார்க்கும்போது நமக்கே கோபம் வருகிறது என்றால், யெகோவாவுக்கு? அவர் மக்களை நேசித்தாலும், அவரை அவமதித்துக்கொண்டும் மக்களை மோசமாக நடத்திக்கொண்டும் இருக்கிற மதத் தலைவர்களை வெறுக்கிறார். அவரை அவமதிக்கும் மதங்களை சீக்கிரத்தில் அடியோடு அழிக்கப்போவதாகச் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 18:8) அவை “இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.”வெளிப்படுத்துதல் 18:21.

ஆராய்ந்து பார்க்கலாம்!

தன்னை அவமதிக்கும் மதங்களைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார்? அவை என்னவெல்லாம் செய்திருக்கின்றன? அதையெல்லாம் பார்த்து நீங்கள் கடவுளைப் பற்றிப் படிப்பதை நிறுத்திவிடலாமா? இப்போது பார்க்கலாம்.

4. எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை

எல்லா மதங்களுமே கடவுளிடம் போய்ச் சேருகிற வெவ்வேறு பாதைகள்தான் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். அது உண்மையா? மத்தேயு 7:13, 14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • வாழ்வுக்குப் போகிற பாதையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்று பைபிள் சொல்கிறதா?

5. மதங்கள் கடவுளைப்போல் அன்பு காட்டுவதில்லை

மதங்கள் நிறைய விதங்களில் கடவுளை அவமதித்திருக்கின்றன. அவைதான் பொய் மதங்கள். அவை முக்கியமாகப் போர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணத்தை வீடியோவில் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • இரண்டாம் உலகப் போரில் சர்ச்சுகள் என்ன செய்தன?

  • அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

யோவான் 13:34, 35-ஐயும் 17:16-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மதங்கள் போரில் கலந்துகொள்வதைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

  • பொய் மதங்கள் நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கின்றன. கடவுளைப்போல் அவை அன்பு காட்டாததை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எந்த விதங்களில்?

பொய் மதங்கள் கடவுளைப் போல அன்பு காட்டுவதில்லை

6. மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க கடவுள் விரும்புகிறார்

வெளிப்படுத்துதல் 18:4-ஐப் படித்துவிட்டு, a இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பொய் மதங்களுடைய பிடியில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்ற கடவுள் விரும்புகிறார் என்று தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

7. உண்மையான கடவுளைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

பொய் மதங்கள் செய்கிற அட்டூழியங்களைப் பார்த்து நாம் கடவுளைக் குறை சொல்லலாமா? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அப்பா கொடுக்கிற நல்ல நல்ல அறிவுரைகளைக் கேட்காமல் பையன் வீட்டைவிட்டு வெளியே போய் நிறைய தப்பு செய்கிறான். அவனுடைய அப்பாவுக்கு அதில் கொஞ்சம்கூட உடன்பாடு இல்லை. பையன் செய்கிற தப்புக்கெல்லாம் அப்பாமேல் பழிபோடுவது ஏன் நியாயமாக இருக்காது?

  • பொய் மதங்கள் செய்கிற அக்கிரமங்களைப் பார்த்துவிட்டு, யெகோவாவைக் குறைசொல்வது நியாயமாக இருக்குமா? அவரைப் பற்றிக் கற்றுக்கொள்வதை நாம் நிறுத்தலாமா?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “இன்னைக்கு மதங்களாலதான் பிரச்சனையே. அதனால கடவுள பத்தி பேசுறதுக்கெல்லாம் எனக்கு இஷ்டமில்ல.”

  • நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?

  • பொய் மதங்கள் செய்வதையெல்லாம் பார்த்துவிட்டு யெகோவாவைக் குறைசொல்வது ஏன் சரியாக இருக்காது?

சுருக்கம்

பொய்களைப் பரப்புவதன் மூலமாகவும் அக்கிரமங்கள் செய்வதன் மூலமாகவும் மதங்கள் கடவுளை அவமதித்திருக்கின்றன. அவற்றைக் கடவுள் அழிக்கப்போகிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • மதங்களின் பொய்ப் போதனைகளையும் கெட்ட செயல்களையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • தன்னை அவமதிக்கும் மதங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?

  • அப்படிப்பட்ட மதங்களைக் கடவுள் என்ன செய்யப்போகிறார்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

கடவுளுக்குப் பிடிக்காத என்ன இரண்டு விஷயங்களைப் பெரும்பாலான மதங்கள் செய்கின்றன?

“எல்லா மதங்களும் ஒன்றுதானா? அவை கடவுளிடம் மக்களை வழிநடத்துகின்றனவா?” (ஆன்லைன் கட்டுரை)

நாம் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டும். இதை அவரே எதிர்பார்க்கிறார். ஏன்?

“ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா?” (ஆன்லைன் கட்டுரை)

ஒரு பாதிரிக்குத் தன் சர்ச்சில் நடந்த சில விஷயங்கள் பிடிக்கவில்லை. ஆனாலும், சோர்ந்துபோகாமல் கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்தார்.

“ஒரு பாதிரி ஏன் சர்ச்சைவிட்டு விலகினார்?” (ஆன்லைன் கட்டுரை)

காலம்காலமாகக் கடவுளைப் பற்றிப் பல பொய்களை மதங்கள் பரப்பியிருப்பதால், கடவுளுக்கு நம்மேல் அக்கறை இல்லை, அவர் கொடூரமானவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட மூன்று பொய்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்” (ஆன்லைன் கட்டுரை)

a பொய் மதங்களையெல்லாம் மகா பாபிலோன் என்ற ஒரு பெண்ணாக வெளிப்படுத்துதல் புத்தகம் வர்ணிக்கிறது. ஏன் என்று தெரிந்துகொள்வதற்கு பின்குறிப்பு 1-ஐப் பாருங்கள்.