Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 28

யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்டுங்கள்

யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்டுங்கள்

உங்கள் நண்பர் ஒரு பெரிய உதவி செய்யும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? கண்டிப்பாக ரொம்ப சந்தோஷப்படுவீர்கள், அவருக்கு நன்றி காட்ட ஆசைப்படுவீர்கள். உயிர் உள்ள வரைக்கும் மறக்க முடியாத ஒரு பெரிய உதவியை யெகோவாவும் இயேசுவும் நமக்காகச் செய்திருக்கிறார்கள். அதுதான் மீட்புவிலை. அதற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

1. கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நன்றி காட்டுவதற்கான ஒரு வழி என்ன?

“[இயேசுமேல்] விசுவாசம் வைக்கிற” எல்லாரும் என்றென்றும் வாழ்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 3:16) விசுவாசம் வைப்பது என்றால் என்ன? வெறுமனே இயேசுமேல் நம்பிக்கை வைப்பதா? இல்லை! விசுவாசம் வைப்பது என்றால், இயேசுமேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நம்முடைய சொல்லிலும், செயலிலும், நாம் எடுக்கும் முடிவுகளிலும் காட்டுவது. (யாக்கோபு 2:17) இந்த விதங்களில் விசுவாசத்தை நாம் காட்டும்போது இயேசுவுக்கும் யெகோவாவுக்கும் நெருங்கிய நண்பர்களாக இருப்போம்.—யோவான் 14:21-ஐ வாசியுங்கள்.

2. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்ட எந்த விசேஷ நிகழ்ச்சி நமக்கு உதவும்?

இயேசு செய்த உயிர்த்தியாகத்துக்கு நன்றி காட்டுவதற்கான இன்னொரு வழியைப் பற்றி அவரே தன் சீஷர்களிடம் சொன்னார். அவர் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி அவர் ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அதுதான் ‘எஜமானின் இரவு விருந்து,’ அதாவது கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சி. (1 கொரிந்தியர் 11:20) அப்போஸ்தலர்களும் அவர்களுக்குப்பின் வரவிருந்த உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் அவர் செய்த உயிர்த்தியாகத்தை அந்த நாளில் நினைத்துப் பார்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அதனால், “என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று கட்டளை கொடுத்தார். (லூக்கா 22:19) நீங்கள் அந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, யெகோவாவும் இயேசுவும் உங்கள்மேல் காட்டிய அளவில்லாத அன்புக்கு நன்றி காட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

யெகோவாவும் இயேசுவும் காட்டிய அளவில்லாத அன்புக்கு இன்னும் என்னென்ன வழிகளில் நன்றி காட்டலாம் என்று இப்போது பார்க்கலாம். கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சி ஏன் ரொம்ப முக்கியம் என்றும் தெரிந்துகொள்ளலாம்.

3. நன்றியைச் செயலில் காட்டுங்கள்

நீங்கள் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உங்களைக் காப்பாற்றுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் செய்த உதவியை நீங்கள் மறந்துவிடுவீர்களா? அல்லது, அவருக்கு எப்படியாவது நன்றி காட்ட வேண்டுமென்று நினைப்பீர்களா?

யெகோவாவின் தயவினால்தான் என்றென்றும் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. 1 யோவான் 4:8-10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசுவின் உயிர்த்தியாகம் நமக்குச் செய்யப்பட்ட மாபெரும் உதவி என்று ஏன் சொல்லலாம்?

  • யெகோவாவும் இயேசுவும் உங்களுக்காக செய்திருப்பதை நினைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

யெகோவாவும் இயேசுவும் காட்டிய அளவில்லாத அன்புக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? 2 கொரிந்தியர் 5:15-ஐயும் 1 யோவான் 4:11; 5:3-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தைப் படித்த பிறகும் இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் நன்றி காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று இந்த வசனத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்?

4. இயேசுவைப் போல நடந்துகொள்ளுங்கள்

இயேசுவைப் போலவே நடந்துகொள்வதுதான் நாம் நன்றி காட்டுவதற்கான இன்னொரு வழி. 1 பேதுரு 2:21-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசுவின் அடிச்சுவடுகளை நீங்கள் என்னென்ன விதங்களில் நெருக்கமாகப் பின்பற்றலாம்?

5. கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்

எஜமானின் இரவு விருந்தில் என்ன நடந்ததென்று தெரிந்துகொள்வதற்கு, லூக்கா 22:14, 19, 20-ஐப் படியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • எஜமானின் இரவு விருந்தில் என்ன நடந்தது?

  • ரொட்டியும் திராட்சமதுவும் எதற்கு அடையாளமாக இருக்கின்றன?—வசனங்கள் 19, 20-ஐப் பாருங்கள்.

தன்னுடைய நினைவுநாள் நிகழ்ச்சியை வருஷத்துக்கு ஒரு தடவை சீஷர்கள் அனுசரிக்க வேண்டுமென்று இயேசு விரும்பினார். அவர் சொன்னது போலவே செய்வதற்காக வருஷத்துக்கு ஒரு தடவை யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுகூடி வருகிறார்கள். இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நினைவுநாள் நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?

ரொட்டி, நமக்காக இயேசு தியாகம் செய்த பரிபூரணமான மனித உடலுக்கு அடையாளம். திராட்சமது, அவருடைய இரத்தத்துக்கு அடையாளம்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “ரட்சிக்கப்படுறதுக்கு இயேசுவை நம்பினாலே போதும்.”

  • இயேசுவை நம்பினால் மட்டுமே போதாது என்பதைக் காட்டுவதற்கு யோவான் 3:16-ஐயும் யாக்கோபு 2:17-ஐயும் எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

சுருக்கம்

இயேசு செய்த உயிர்த்தியாகத்துக்கு நன்றி காட்ட அவர்மேல் விசுவாசம் வைக்க வேண்டும், அவருடைய நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்.

ஞாபகம் வருகிறதா?

  • இயேசுமேல் விசுவாசம் வைப்பது என்றால் என்ன?

  • யெகோவாவும் இயேசுவும் உங்களுக்காகச் செய்த பெரிய உதவிக்கு நீங்கள் எப்படி நன்றி காட்ட விரும்புகிறீர்கள்?

  • கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

கிறிஸ்துவின் உயிர்த்தியாகம் என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?

யெகோவாவின் மகிமைக்காகத் தன் உடலைப் பயன்படுத்தினார் (9:28)

விசுவாசம் என்றால் என்ன, அதை நாம் எப்படிக் காட்டலாம் என்றெல்லாம் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

“யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்” (காவற்கோபுரம், அக்டோபர் 2016)

கிறிஸ்துவின் உயிர்த்தியாகத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறியது? “இப்போது எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்” என்ற அனுபவத்தில் பாருங்கள்.

“பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (ஆன்லைன் கட்டுரை)