Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 32

கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!

கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!

கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. அப்போதுதான் மனித ஆட்சியின் கடைசி நாட்களும் ஆரம்பமானது. இதைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் என்ன சொன்னது? 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் எப்படி மோசமாகியிருக்கின்றன? பார்க்கலாம்.

1. பைபிள் தீர்க்கதரிசனம் என்ன சொன்னது?

“ஏழு காலங்கள்” என்ற காலப்பகுதியின் முடிவில் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் என்று பைபிள் சொன்னது. (தானியேல் 4:16, 17) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதே காலப்பகுதியை “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” என்று இயேசு சொன்னார். அவர் வாழ்ந்த சமயத்தில்கூட அந்தக் காலப்பகுதி முடிவடையவில்லை என்று சுட்டிக்காட்டினார். (லூக்கா 21:24) இந்தப் பாடத்தில் நாம் பார்க்கப்போகிறபடி, அந்த ஏழு காலங்கள் 1914-ல் முடிவடைந்தது.

2. 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் எப்படி மோசமாகியிருக்கின்றன?

இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். (மத்தேயு 24:3) பரலோகத்தில் தன்னுடைய ஆட்சி ஆரம்பித்த பிறகு பூமியில் என்னென்ன நடக்கும் என்று இயேசு அவர்களிடம் சொன்னார். உதாரணத்துக்கு, போரும் பஞ்சமும் நிலநடுக்கமும் வரும் என்று சொன்னார். (மத்தேயு 24:7-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, “கடைசி நாட்களில்” மக்களுடைய குணங்கள் மோசமாகும் என்பதால் “சமாளிக்க முடியாத அளவுக்கு” வாழ்க்கை கஷ்டமாக இருக்கும் என்று பைபிள் சொன்னது. (2 தீமோத்தேயு 3:1-5) முக்கியமாக 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் படுமோசமாகியிருக்கின்றன.

3. கடவுளுடைய ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து உலகம் ஏன் இவ்வளவு மோசமாகியிருக்கிறது?

இயேசு ராஜாவானதும் சாத்தானோடும் பேய்களோடும் பரலோகத்தில் போர் செய்தார். அதில் சாத்தான் தோற்றுப்போனான். “அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 12:9, 10, 12) சாத்தான் அழியப்போவதால் பயங்கர கோபத்தோடு இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறான். அதனால்தான் இந்த உலகத்தில் இவ்வளவு வலி, இவ்வளவு வேதனை! ஆனால், கடவுளுடைய அரசாங்கம் இதற்கெல்லாம் முடிவுகட்டும்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

1914-ல் கடவுளுடைய ஆட்சி ஆரம்பித்தது என்று எப்படிச் சொல்லலாம்? அந்த ஆட்சி இப்போது நடந்துவருவதை நீங்கள் நம்புகிறீர்கள் என்று எப்படிக் காட்டலாம்? பார்க்கலாம்.

4. பைபிளின் கணக்குப்படி அந்த வருஷம் 1914

பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாருக்குக் கடவுள் ஒரு கனவை வரவைத்தார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அதில் காட்டினார். அந்தக் கனவைப் பற்றியும் அதற்கு தானியேல் தந்த விளக்கத்தைப் பற்றியும் பைபிள் சொல்வதைப் பார்க்கும்போது, அதெல்லாம் நேபுகாத்நேச்சாரின் ஆட்சிக்கு மட்டுமல்லாமல் கடவுளுடைய ஆட்சிக்கும் பொருந்துவது தெரிகிறது.—தானியேல் 4:17-ஐ வாசியுங்கள். a

தானியேல் 4:20-26-ஐப் படித்துவிட்டு, அடுத்த பக்கத்தில் இருக்கும் அட்டவணையைப் பார்த்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • (A) நேபுகாத்நேச்சார் என்ன கனவு கண்டார்?—வசனங்கள் 20, 21-ஐப் பாருங்கள்.

  • (B) மரத்துக்கு என்ன ஆகும்?—வசனம் 23-ஐப் பாருங்கள்.

  • (C) ‘ஏழு காலங்களுடைய’ முடிவில் என்ன நடக்கும்?—வசனம் 26-ஐப் பாருங்கள்.

மரம் பற்றிய கனவும் கடவுளுடைய ஆட்சியும்

தீர்க்கதரிசனம் (தானியேல் 4:20-36)

ஆட்சி

(A) பிரமாண்டமான மரம்

ஆட்சி தடைபடுகிறது

(B) “இந்த மரத்தை வெட்டி நாசமாக்குங்கள்,” “இப்படியே ஏழு காலங்கள் உருண்டோடட்டும்”

மீண்டும் ஆட்சி

(C) “ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வீர்கள்”

இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில் . . .

  • (D) மரம் யாருக்கு அடையாளமாக இருந்தது?—வசனம் 22-ஐப் பாருங்கள்.

  • (E) அவருடைய ஆட்சி எப்படித் தடைபட்டது?தானியேல் 4:29-33-ஐ வாசியுங்கள்.

  • (F) ‘ஏழு காலங்களுடைய’ முடிவில் நேபுகாத்நேச்சாருக்கு என்ன நடந்தது?தானியேல் 4:34-36-ஐ வாசியுங்கள்.

முதல் நிறைவேற்றம்

ஆட்சி

(D) பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார்

ஆட்சி தடைபடுகிறது

(E) கி.மு. 606-க்குப் பிறகு நேபுகாத்நேச்சாருக்குப் புத்தி குழம்பியது, ஏழு வருஷங்கள் அவர் ஆட்சி செய்யவில்லை

மீண்டும் ஆட்சி

(F) நேபுகாத்நேச்சாருக்குப் புத்தி தெளிந்தது, மறுபடியும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்

இந்தத் தீர்க்கதரிசனத்தின் இரண்டாம் நிறைவேற்றத்தில் . . .

  • (G) மரம் யாருக்கு அடையாளமாக இருந்தது?1 நாளாகமம் 29:23-ஐ வாசியுங்கள்.

  • (H) அவர்களுடைய ஆட்சி எப்படித் தடைபட்டது? இயேசு இந்தப் பூமியில் இருந்தபோதும் அது தடைபட்டிருந்தது என்று நமக்கு எப்படித் தெரியும்?லூக்கா 21:24-ஐ வாசியுங்கள்.

  • (I) இந்த ஆட்சி மறுபடியும் எப்போது ஆரம்பித்தது, எங்கே ஆரம்பித்தது?

இரண்டாவது நிறைவேற்றம்

ஆட்சி

(G) கடவுளுடைய அரசாட்சிக்குப் பிரதிநிதிகளாக இருந்த இஸ்ரவேல் ராஜாக்கள்

ஆட்சி தடைபடுகிறது

(H) எருசலேம் அழிந்தது, இஸ்ரவேல் ராஜாக்களின் ஆட்சி 2,520 வருஷங்களுக்குத் தடைபட்டது

மீண்டும் ஆட்சி

(I) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு பரலோகத்தில் ஆட்சியை ஆரம்பித்தார்

ஏழு காலங்கள் என்பது எவ்வளவு வருஷம்?

பைபிளில் இருக்கும் சில பகுதிகள் மற்ற பகுதிகளைப் புரிந்துகொள்ள உதவி செய்கின்றன. உதாரணத்துக்கு, மூன்றரை காலங்கள் என்பது 1,260 நாட்கள் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:6, 14) ஏழு காலங்கள் என்பது அதைவிட இரண்டு மடங்கு, அதாவது 2,520 நாட்கள். பைபிளில் ஒரு நாள் என்பது சிலசமயம் ஒரு வருஷத்தைக் குறிக்கிறது. (எசேக்கியேல் 4:6) அதனால், தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஏழு காலங்கள் 2,520 வருஷங்களைக் குறிக்கின்றன.

5. 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது

தான் ராஜாவாக ஆன பிறகு உலக நிலைமைகள் எப்படி இருக்கும் என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். லூக்கா 21:9-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இதில் எதையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?

மனித ஆட்சியின் கடைசி நாட்களில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். 2 தீமோத்தேயு 3:1-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இப்படிப்பட்ட ஆட்களில் யாரையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

6. கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்துவருவதை நம்புகிறீர்கள் என்று காட்டுங்கள்

மத்தேயு 24:3, 14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுளுடைய அரசாங்கம் இப்போது ஆட்சி செய்துவருவதை எந்த முக்கியமான வேலை காட்டுகிறது?

  • இந்த வேலையை நீங்களும் எப்படிச் செய்யலாம்?

கடவுளுடைய அரசாங்கம் இப்போது ஆட்சி செய்துவருகிறது, சீக்கிரத்தில் பூமி முழுவதையும் ஆட்சி செய்யப்போகிறது. எபிரெயர் 10:24, 25-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • “நாள் நெருங்கி வருவதை” பார்க்கிற நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?

மற்றவர்களுக்கு உதவும் ஒரு விஷயத்தை, அதுவும் அவர்களுடைய உயிரையே காப்பாற்றும் விஷயத்தை, நீங்கள் தெரிந்துகொண்டால் என்ன செய்வீர்கள்?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “கடவுளோட ஆட்சி ஆரம்பிச்சிடுச்சுனா உலகம் ஏன் இவ்ளோ மோசமா இருக்கு?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

பைபிள் தீர்க்கதரிசனங்களும், காலக்கணக்கும், உலக நிலைமைகளும் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்துவருவதைக் காட்டுகின்றன. நாம் இதை நம்பினால், இதைப் பற்றி எல்லாருக்கும் சொல்வோம், சபைக் கூட்டங்களிலும் கலந்துகொள்வோம்.

ஞாபகம் வருகிறதா?

  • தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஏழு காலங்களின் முடிவில் என்ன நடந்தது?

  • கடவுளுடைய ஆட்சி 1914-ல் ஆரம்பமானது என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?

  • அந்த ஆட்சி இப்போது நடந்துவருவதை நீங்கள் நம்புகிறீர்கள் என்று எப்படிக் காட்டலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

1914-லிருந்து இந்த உலகம் எப்படி மாறியிருக்கிறது என்று சரித்திர வல்லுநர்கள் சொல்வதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“திடீரென்று ஒழுக்கநெறி சீரழிந்தபோது” (விழித்தெழு!, ஏப்ரல் 2007)

மத்தேயு 24:14-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று பாருங்கள்.

“எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன்” (காவற்கோபுரம் எண் 3 2017)

 தானியேல் 4-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் கடவுளுடைய அரசாங்கத்துக்குப் பொருந்துகிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?

“கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சுது? (பகுதி 1)” (காவற்கோபுரம், ஜனவரி 1, 2015)

தானியேல் 4-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட “ஏழு காலங்கள்” 1914-ல் முடிவடைந்தது என்று எப்படிச் சொல்லலாம்?

“கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சுது? (பகுதி 2)” (காவற்கோபுரம், ஏப்ரல் 1, 2015)

a இந்தப் பாடத்தில் இருக்கும் “அலசிப் பாருங்கள்” பகுதியிலுள்ள  கடைசி இரண்டு கட்டுரைகளைப் பாருங்கள்.