Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 45

நடுநிலை​—⁠அர்த்தம் என்ன?

நடுநிலை​—⁠அர்த்தம் என்ன?

“நீங்கள் உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 15:19) அதனால், நாம் நடுநிலையோடு இருக்க வேண்டும். அதாவது, அரசியலிலும் போர்களிலும் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்கக் கூடாது. இப்படி நடுநிலையோடு இருப்பது சுலபம் கிடையாதுதான். அதற்காக மற்றவர்கள் நம்மைக் கேலிகிண்டல்கூட செய்யலாம். ஆனால், நாம் நடுநிலையை விட்டுக்கொடுக்காமல் இருந்தால் யெகோவாவுக்கு உண்மையாக இருப்போம். அதை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

1. மனித அரசாங்கங்களைப் பற்றி உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் அரசாங்கத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார்கள். இயேசு சொன்னது போலவே “அரசனுடையதை அரசனுக்கு” கொடுக்கிறார்கள். அதாவது, வரி கட்டுவது போன்ற அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். (மாற்கு 12:17) யெகோவா அனுமதித்திருப்பதால்தான் இவ்வளவு காலமாக மனித அரசாங்கங்கள் நம்மை ஆட்சி செய்திருக்கின்றன என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 13:1) அதனால், அவரைவிட அதிக அதிகாரம் மனித அரசாங்கங்களுக்கு இல்லை என்று நாம் புரிந்துகொள்கிறோம். அவருடைய அரசாங்கம்தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் என்று நம்புகிறோம்.

2. நாம் நடுநிலையோடு இருப்பதை எப்படிக் காட்டலாம்?

இயேசுவைப் போலவே நாமும் அரசியலில் ஈடுபடுவதில்லை. அவர் செய்த ஒரு அற்புதத்தை மக்கள் பார்த்தபோது அவரை ராஜாவாக்க நினைத்தார்கள். ஆனால், அவர் அதற்கு இடம்கொடுக்கவில்லை. (யோவான் 6:15) ஏன்? “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று பிற்பாடு அவரே சொன்னார். (யோவான் 18:36) அவருடைய சீஷர்களாக நாமும் நிறைய விதங்களில் நடுநிலையோடு இருக்கிறோம். உதாரணத்துக்கு, நாம் போருக்குப் போவதில்லை. (மீகா 4:3-ஐ வாசியுங்கள்.) கொடி போன்ற தேசியச் சின்னங்களுக்கு மதிப்புக் கொடுத்தாலும் அவற்றை வணங்குவதில்லை. (1 யோவான் 5:21) எந்த அரசியல் கட்சியையோ வேட்பாளரையோ நாம் ஆதரிப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. இதுபோன்ற பல வழிகளில் நாம் கடவுளுடைய அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருக்கிறோம்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

என்னென்ன சூழ்நிலைகளில் நடுநிலையோடு இருப்பது கஷ்டமாக இருக்கலாம் என்றும், யெகோவாவுக்குப் பிடித்த தீர்மானங்களை நீங்கள் எப்படி எடுக்கலாம் என்றும் பார்க்கலாம்.

3. உண்மைக் கிறிஸ்தவர்கள் நடுநிலையோடு இருப்பார்கள்

இயேசுவும் அவருடைய சீஷர்களும் நமக்கு நல்ல முன்மாதிரி. ரோமர் 13:1, 5-7-ஐயும் 1 பேதுரு 2:13, 14-ஐயும் படியுங்கள். பிறகு, வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் ஏன் அரசாங்க அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்?

  • நாம் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை எப்படிக் காட்டலாம்?

போர் சமயங்களில், சில நாடுகள் நடுநிலையோடு இருப்பதாகச் சொன்னாலும் சண்டை போடும் இரண்டு நாடுகளுக்குமே உதவி செய்கின்றன. ஆனால், உண்மையான நடுநிலை என்பது என்ன? யோவான் 17:16-ஐப் படியுங்கள். பிறகு, வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நடுநிலையோடு இருப்பது என்றால் என்ன?

கடவுளுடைய சட்டத்துக்கு எதிராக எதையாவது செய்யும்படி அரசாங்க அதிகாரிகள் சொன்னால் என்ன செய்வது? அப்போஸ்தலர் 5:28, 29-ஐப் படியுங்கள். பிறகு, வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மனிதர்களுடைய சட்டம் கடவுளுடைய சட்டத்துக்கு எதிராக இருந்தால் யாருடைய சட்டத்துக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்?

  • என்னென்ன சூழ்நிலைகளில் அரசாங்க அதிகாரிகளுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டியதில்லை என்று நினைக்கிறீர்கள்?

4. யோசனைகளிலும் செயல்களிலும் நடுநிலையோடு இருங்கள்

1 யோவான் 5:21-ஐப் படியுங்கள். பிறகு, வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • அயேங்கே ஏன் அரசியல் கட்சியில் சேரவில்லை, ஏன் கொடி வணக்கம் போன்ற தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை?

  • அவர் சரியான முடிவை எடுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?

வேறென்ன சூழ்நிலைகளில் நடுநிலையோடு இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் எப்படி நடுநிலையோடு இருக்கலாம்?

  • அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால் நமக்கு நல்லது நடக்கிறதோ கெட்டது நடக்கிறதோ, நாம் எப்படி நடுநிலையோடு இருக்கலாம்?

  • எப்போதும் அரசியல் செய்திகளைக் கேட்டுக்கொண்டோ அரசியலில் ஆர்வம் உள்ளவர்களோடு பேசிக்கொண்டோ இருப்பது நம் நடுநிலையை எப்படிப் பாதிக்கலாம்?

என்ன விஷயங்களில் ஒரு கிறிஸ்தவர் தன் யோசனையிலும் செயலிலும் நடுநிலையோடு இருக்க வேண்டும்?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “நீங்க ஏன் கொடி வணக்கம் செய்றதில்ல, ஏன் தேசிய கீதம் பாடுறதில்ல?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

யோசனைகளிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் நடுநிலையோடு இருக்க கிறிஸ்தவர்கள் நிறைய முயற்சி எடுக்கிறார்கள்.

ஞாபகம் வருகிறதா?

  • அரசாங்கங்களுக்கு என்ன செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்?

  • நாம் ஏன் அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருக்கிறோம்?

  • என்னென்ன சூழ்நிலைகளில் நடுநிலையோடு இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

நடுநிலையோடு இருப்பதற்கு நாம் என்னென்ன தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்?

யெகோவா எங்களைக் கைவிடவே இல்லை (3:14)

கஷ்டமான சூழ்நிலைகளிலும் நடுநிலையோடு இருக்க குடும்பங்கள் எப்படி முன்கூட்டியே தயாராகலாம்?

பொது நிகழ்ச்சிகளில் நடுநிலையைக் காத்துக்கொள்ளுதல் (4:25)

நாட்டைப் பாதுகாப்பதுதான் ஒருவருக்குக் கிடைக்கும் பெரிய கவுரவம் என்று ஏன் சொல்ல முடியாது?

“கடவுளால் எல்லாமே முடியும்” (5:19)

வேலை விஷயத்தில் முடிவுகள் எடுக்கும்போது நாம் எப்படி இந்த உலகத்தின் பாகமாக இல்லாமல் இருக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக்கொள்ளட்டும்” (காவற்கோபுரம், மார்ச் 15, 2006)