Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 48

நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

நெருங்கிய நண்பர்கள் சந்தோஷமான சமயங்களில் மட்டுமல்ல, கஷ்டமான சமயங்களிலும் நம்கூடவே இருப்பார்கள். ஆனால், எல்லாருமே நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால், நாம் கவனமாக இருக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், நீங்கள் எப்படி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்? இந்தக் கேள்விகளைக் கவனியுங்கள்.

1. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் உங்களை எப்படிப் பாதிக்கலாம்?

நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடலாம். நேரில் பழகினாலும் சரி, சோஷியல் மீடியாவில் பழகினாலும் சரி, அவர்களைப் போல் நாம் நல்லவர்களாகவும் ஆகலாம், கெட்டவர்களாகவும் ஆகிவிடலாம். அதனால்தான், “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு [அதாவது, யெகோவாவை நேசிக்காதவர்களோடு] பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) யெகோவாவை நேசிக்கிறவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால், அவரிடம் நெருங்கியிருக்கவும் நல்ல முடிவுகளை எடுக்கவும் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், அவரை நேசிக்காதவர்கள் நம் நண்பர்களாக இருந்தால் நாம் யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. கடவுளை நேசிக்கிறவர்கள் நம் நண்பர்களாக இருந்தால் நமக்கும் பிரயோஜனமாக இருக்கும், அவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். ஏனென்றால், ‘எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும், ஒருவரை ஒருவர் பலப்படுத்தவும்’ முடியும்.​—1 தெசலோனிக்கேயர் 5:11.

2. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பற்றி யெகோவா என்ன நினைப்பார்?

யெகோவா தன் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். அவர் “நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.” (நீதிமொழிகள் 3:32) யெகோவாவை நேசிக்காதவர்களை நண்பர்களாக நாம் தேர்ந்தெடுத்தால் அவருக்கு எப்படி இருக்கும்? ரொம்ப ஏமாற்றமாக இருக்கும்! (யாக்கோபு 4:4-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவரை நேசிக்கிறவர்களை நம் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். கெட்ட நண்பர்களை விட்டுவிட்டு அவரிடம் நாம் நெருங்கிப்போனால், நம்மை அவருடைய நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பார்.​—சங்கீதம் 15:1-4.

ஆராய்ந்து பார்க்கலாம்!

நாம் யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது ஏன் முக்கியம்? உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் நல்ல நண்பர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பார்க்கலாம்.

3. கெட்ட சகவாசம் ஆபத்து!

கடவுளையும் அவருடைய சட்டதிட்டங்களையும் நேசிக்காதவர்கள்தான் கெட்ட சகவாசம். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நமக்கே தெரியாமல் நாம் எப்படிக் கெட்ட நண்பர்களோடு பழக ஆரம்பித்துவிடலாம்?

1 கொரிந்தியர் 15:33-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • எப்படிப்பட்டவர்கள் உங்களுக்குக் கெட்ட நண்பர்களாக இருக்கலாம்? ஏன்?

சங்கீதம் 119:63-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஒருவர் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பார் என்பதை எதை வைத்துச் சொல்லலாம்?

புழுபுழுத்த ஒரே ஒரு பழத்தினால் மற்ற பழங்களும் கெட்டுவிடும். ஒரே ஒரு கெட்ட நண்பரால் உங்களுக்கு என்ன பாதிப்பு வரும்?

4. நம்மைப் போல் இல்லாதவர்களும் நமக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும்

இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீதையும் யோனத்தானையும் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களுடைய வயதும் பின்னணியும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஆனாலும், அவர்கள் உயிர் நண்பர்களாக இருந்தார்கள். 1 சாமுவேல் 18:1-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நட்புக்கு வயதும் அந்தஸ்தும் முக்கியம் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்?

ரோமர் 1:11, 12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவை நேசிக்கும் நண்பர்கள் எப்படி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த முடியும்?

எதிர்பார்க்காத இடங்களில்கூட நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதை ஓர் இளம் சகோதரரின் அனுபவம் காட்டுகிறது. வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • அக்கிலின் அம்மாவும் அப்பாவும் அவனுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் பற்றி ஏன் அவனிடம் பேசினார்கள்?

  • ஆரம்பத்தில் அந்த நண்பர்களை அவனுக்கு ஏன் பிடித்திருந்தது?

  • தனிமையை சமாளிக்க அவனுக்கு எப்படி வழி கிடைத்தது?

5. நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க வழி

நல்ல நண்பர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றும், நீங்களும் எப்படி நல்ல நண்பராக இருக்கலாம் என்றும் கவனியுங்கள். வீடியோவைப் பாருங்கள்.

நீதிமொழிகள் 18:24-ஐயும் 27:17-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உண்மையான நண்பர்கள் எப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள்?

  • உங்களுக்கு அதுபோன்ற நல்ல நண்பர்கள் இருக்கிறார்களா? இல்லை என்றால், நீங்கள் எப்படி நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்கலாம்?

பிலிப்பியர் 2:4-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமென்றால், முதலில் நீங்கள் நல்ல நண்பராக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமென்றால், நீங்கள் முதலில் நல்ல நண்பராக இருக்க வேண்டும்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நல்லவங்களா கெட்டவங்களானு ஓவரா பார்த்துட்டு இருந்தா நமக்கு ஃப்ரெண்ட்ஸே கிடைக்க மாட்டாங்க.”

  • நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சுருக்கம்

நண்பர்களை நாம் கவனமாகத் தேர்ந்தெடுத்தால் யெகோவா சந்தோஷப்படுவார், நமக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

ஞாபகம் வருகிறதா?

  • நாம் யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற விஷயத்தில் யெகோவா ஏன் அக்கறையாக இருக்கிறார்?

  • நாம் யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது?

  • யெகோவாவை நேசிப்பவர்களை நீங்கள் எப்படி நெருங்கிய நண்பர்களாக ஆக்கிக்கொள்ளலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

கஷ்ட காலங்களில் நல்ல நண்பர்கள் நமக்கு எப்படி உதவி செய்வார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“நட்பெனும் பாலம்—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்!” (காவற்கோபுரம், நவம்பர் 2019)

நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“நல்ல நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?” (ஆன்லைன் கட்டுரை)

ஆன்லைன் நண்பர்களோடு பழகுவதைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும்?

சோஷியல் நெட்வொர்க் —புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? (4:12)

“அப்பாவுக்காக ஏங்கினேன்” என்ற அனுபவத்தில், ஒருவர் ஏன் புதிய நண்பர்களைத் தேடிப்போனார் என்று பாருங்கள்.

“பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (காவற்கோபுரம், ஜூலை 1, 2012)