Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 1​—மீண்டும் ஒரு பார்வை!

பகுதி 1​—மீண்டும் ஒரு பார்வை!

உங்களுக்கு பைபிளை சொல்லித்தருபவரோடு சேர்ந்து இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  1. எதிர்காலத்தைப் பற்றி பைபிள் தரும் வாக்குறுதிகளில் உங்கள் மனதைத் தொடுவது எது?

    (பாடம் 02-ஐப் பாருங்கள்.)

  2. கடவுள் தந்த புத்தகம்தான் பைபிள் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

    (பாடம் 03-ஐயும் 05-ஐயும் பாருங்கள்.)

  3. யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

    (பாடம் 04-ஐப் பாருங்கள்.)

  4. ‘[கடவுள்தான்] எல்லாவற்றையும் படைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) நீங்கள் இதை நம்புகிறீர்களா?

    (பாடம் 06-ஐப் பாருங்கள்.)

  5. நீதிமொழிகள் 3:32-ஐ வாசியுங்கள்.

    • யெகோவாவைப் போல் ஒரு சிறந்த நண்பர் நமக்குக் கிடைக்கவே மாட்டார் என்று ஏன் சொல்லலாம்?

    • தன்னுடைய நண்பர்கள் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்? இது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா?

      (பாடம் 07-ஐயும் 08-ஐயும் பாருங்கள்.)

  6. சங்கீதம் 62:8-ஐப் படியுங்கள்.

    • நீங்கள் என்னென்ன விஷயங்களுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்திருக்கிறீர்கள்? வேறென்ன விஷயங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

    • யெகோவா எப்படி ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார்?

      (பாடம் 09-ஐப் பாருங்கள்.)

  7. எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.

    • யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வருவதால் உங்களுக்கு என்ன நன்மை?

    • கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி வீண்போகாது என்று நினைக்கிறீர்களா?

      (பாடம் 10-ஐப் பாருங்கள்.)

  8. பைபிளைத் தவறாமல் வாசிப்பது ஏன் நல்லது? தினமும் பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் எந்த நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள்?

    (பாடம் 11-ஐப் பாருங்கள்.)

  9. இதுவரை நீங்கள் பைபிளைப் படித்ததில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் எது?

  10. பைபிளைப் படிப்பதற்கு இதுவரை உங்களுக்கு ஏதாவது தடை வந்திருக்கிறதா? தடைகளைத் தாண்டி தொடர்ந்து படிப்பதற்கு எது உங்களுக்கு உதவி செய்யும்?

    (பாடம் 12-ஐப் பாருங்கள்.)