Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் தயாரா?

நான் தயாரா?

சபையோடு ஊழியம் செய்ய நான் தயாரா?

இதெல்லாம் உங்களுக்குப் பொருந்தினால் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆவதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்:

  •   தவறாமல் பைபிளைப் படிக்கிறீர்கள், ஜெபம் செய்கிறீர்கள், கூட்டங்களில் கலந்துகொள்கிறீர்கள்.

  •   கற்றுக்கொள்ளும் விஷயங்களை மதிக்கிறீர்கள், நம்புகிறீர்கள், அதைப் பற்றியெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறீர்கள்.

  •   யெகோவாவை நேசிக்கிறீர்கள், அவரை நேசிக்கிறவர்களை உங்களுடைய நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

  •   அரசியல் மற்றும் பொய் மத அமைப்புகளிலிருந்து விலகிவிட்டீர்கள்.

  •   யெகோவாவின் நெறிமுறைகள்படி வாழ்கிறீர்கள், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆக ஆசைப்படுகிறீர்கள்.

சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய நீங்கள் தயாராக இருப்பதாக நினைத்தால், உங்களுக்கு பைபிளைச் சொல்லித்தருபவரிடம் பேசுங்கள். நீங்கள் தகுதி பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றி மூப்பர்களோடு கலந்துபேச அவர் உதவி செய்வார்.

ஞானஸ்நானம் எடுக்க நான் தயாரா?

இதெல்லாம் உங்களுக்குப் பொருந்தினால் ஞானஸ்நானம் எடுக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்:

  •   ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருக்கிறீர்கள்.

  •   எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு ஊழியம் செய்கிறீர்கள், அதில் தவறாமல் கலந்துகொள்கிறீர்கள்.

  •   ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ ஆதரிக்கிறீர்கள், அவர்கள் தரும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறீர்கள்.—மத்தேயு 24:​45-47.

  •   ஜெபத்தில் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறீர்கள், என்றென்றும் அவருக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள்.

ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாராக இருப்பதாக நினைத்தால், உங்களுக்கு பைபிளைச் சொல்லித்தருபவரிடம் பேசுங்கள். நீங்கள் தகுதி பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றி மூப்பர்களோடு கலந்துபேச அவர் உதவி செய்வார்.