Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களுக்குக் கொடுப்பது

மற்றவர்களுக்குக் கொடுப்பது

தாராளமாகக் கொடுப்பதில் யெகோவாதான் சிறந்த முன்மாதிரி என்று எப்படிச் சொல்லலாம்?

எப்படிக் கொடுப்பது கடவுளுக்குப் பிடிக்காது?

மத் 6:1, 2; 2கொ 9:7; 1பே 4:9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 4:3-7; 1யோ 3:11, 12—காயீன் கொடுத்த பலியைக் கடவுள் ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம்

    • அப் 5:1-11—நன்கொடை கொடுக்கும் விஷயத்தில் அனனியாவும் சப்பீராளும் பொய் சொன்னார்கள்; கெட்ட எண்ணத்தோடு அவர்கள் அப்படிச் செய்ததால் தண்டிக்கப்பட்டார்கள்

எப்படிக் கொடுப்பது கடவுளுக்குப் பிடிக்கும்?

மத் 6:3, 4; ரோ 12:8; 2கொ 9:7; எபி 13:16

இதையும் பாருங்கள்: அப் 20:35

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 21:1-4—ஒரு ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள காசுகளை நன்கொடையாகக் கொடுத்தாள்; ஆனாலும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தாராளமாகக் கொடுத்ததற்காக அவளை இயேசு பாராட்டினார்

நன்கொடைகள் கொடுப்பதற்கு முதல் நூற்றாண்டு சபைகளில் என்ன ஏற்பாடு இருந்தது?

அப் 11:29, 30; ரோ 15:25-27; 1கொ 16:1-3; 2கொ 9:5, 7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 4:34, 35—கிறிஸ்தவர்கள் தாராளமாகப் பண உதவி செய்தார்கள், அவரவர் தேவைக்கு ஏற்றபடி அந்தப் பணத்தை அப்போஸ்தலர்கள் பகிர்ந்து கொடுத்தார்கள்

    • 2கொ 8:1, 4, 6, 14—தேவையில் இருந்த கிறிஸ்தவர்களுக்காக நிவாரணப் பணி ஏற்பாடு செய்யப்பட்டது

குடும்பத்துக்கும் சகோதர சகோதரிகளுக்கும் என்ன செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது?

ஏழைகளுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது?

கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுவதுதான் மக்களுக்கு நாம் செய்யும் உதவிகளில் மிகச் சிறந்தது என்று எப்படிச் சொல்லலாம்?

மத் 5:3, 6; யோவா 6:26, 27; 1கொ 9:23

இதையும் பாருங்கள்: நீதி 2:1-5; 3:13; பிர 7:12; மத் 11:4, 5; 24:14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 10:39-42—கடவுளிடம் நெருங்கிப்போக உதவும் விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மார்த்தாளுக்கு இயேசு உதவினார்