Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆலோசனை; அறிவுரை

ஆலோசனை; அறிவுரை

ஆலோசனை கிடைக்கும்போது

பைபிள் தரும் ஆலோசனைகள் நமக்கு எப்படி நன்மை தரும்?

சங் 32:8; நீதி 15:22; 19:20; 20:18

இதையும் பாருங்கள்: நீதி 11:14

நம்மை நியாயப்படுத்துவதைவிட ஆலோசனையை ஏற்றுக்கொள்வது ஏன் நல்லது?

நீதி 12:15; 29:1

இதையும் பாருங்கள்: நீதி 1:23-31; 15:31

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 15:3, 9-23—சாமுவேல் தீர்க்கதரிசி கண்டித்தபோது சவுல் மனம் திருந்துவதற்குப் பதிலாகத் தான் செய்ததை நியாயப்படுத்தினார்; அதனால், சவுலை யெகோவா ஒதுக்கித்தள்ளிவிட்டார்

    • 2நா 25:14-16, 27—பாவத்தைவிட்டுத் திருந்தும்படி அமத்சியா ராஜாவுக்கு யெகோவாவின் தீர்க்கதரிசி ஆலோசனை கொடுத்தபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் யெகோவா தந்த ஆதரவையும் பாதுகாப்பையும் இழந்துவிட்டார்

நமக்கு ஆலோசனை கொடுக்கும் கண்காணிகளுக்கு நாம் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும்?

1தெ 5:12; 1தீ 5:17; எபி 13:7, 17

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 3யோ 9, 10—கிறிஸ்தவ சபையை வழிநடத்திக்கொண்டிருந்த சகோதரர்களை தியோத்திரேப்பு மரியாதையோடு நடத்தாததால் வயதான அப்போஸ்தலன் யோவான் அவனைக் கண்டித்தார்

வயதில் பெரியவர்கள் சொல்லும் ஆலோசனையை நாம் ஏன் கேட்க வேண்டும்?

லேவி 19:32; நீதி 16:31

இதையும் பாருங்கள்: யோபு 12:12; 32:7; தீத் 2:3-5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 23:16-18—தன்னைவிட 30 வயது பெரியவராக இருந்த யோனத்தான் கொடுத்த ஆலோசனையை தாவீது ராஜா கேட்டார், அது அவரைப் பலப்படுத்தியது

    • 1ரா 12:1-17—ரெகொபெயாம் ராஜா, பெரியோர்கள் கொடுத்த நியாயமான ஆலோசனையை ஒதுக்கித்தள்ளிவிட்டு, இளைஞர்கள் கொடுத்த கறாரான ஆலோசனையின்படி நடந்தார்; அதனால் மோசமான விளைவு ஏற்பட்டது

யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிற பெண்களும் வயதில் சிறியவர்களும் நல்ல ஆலோசனைகளைக் கொடுக்க முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

யோபு 32:6, 9, 10; நீதி 31:1, 10, 26; பிர 4:13

இதையும் பாருங்கள்: சங் 119:100

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 25:14-35—அபிகாயில் கொடுத்த ஆலோசனை நிறைய பேருடைய உயிரைக் காப்பாற்றியது, கொலைப்பழிக்கு ஆளாகாமல் இருக்க தாவீதுக்கும் உதவியது

    • 2சா 20:15-22—ஆபேல் என்ற நகரத்தில் வாழ்ந்த ஒரு புத்திசாலியான பெண் கொடுத்த ஆலோசனையால் அந்த முழு நகரமும் பாதுகாக்கப்பட்டது

    • 2ரா 5:1-14—இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு சிறுமி கொடுத்த ஆலோசனையால்தான், தொழுநோயிலிருந்து குணமாக என்ன செய்ய வேண்டுமென்று ஒரு மாவீரர் தெரிந்துகொண்டார்

யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் மதிக்காதவர்கள் கொடுக்கும் ஆலோசனையை நாம் ஏன் கேட்கக் கூடாது?

சங் 1:1; நீதி 4:14

இதையும் பாருங்கள்: லூ 6:39

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1நா 10:13, 14—யெகோவாவிடம் ஆலோசனை கேட்பதற்குப் பதிலாக ஆவிகளோடு பேசுகிறவளிடம் சவுல் ராஜா ஆலோசனை கேட்டார்; இப்படிக் கீழ்ப்படியாமல்போனதால் செத்துப்போனார்

    • 2நா 22:2-5, 9—அகசியா ராஜா கெட்ட ஆலோசனையைக் கேட்டார், அதனால் அழிந்துபோனார்

    • யோபு 21:7, 14-16—யெகோவாவை மதிக்காதவர்களைப் போல் யோபு யோசிக்கவில்லை

ஆலோசனை கொடுப்பது

ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, எல்லா உண்மைகளையும் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? இரண்டு தரப்பில் இருக்கிற ஆட்கள் சொல்வதையும் ஏன் கேட்க வேண்டும்?

நீதி 18:13, 17

இதையும் பாருங்கள்: நீதி 25:8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 1:9-16—தலைமைக் குருவான ஏலி, அன்னாளிடம் உண்மையை விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு முன்பே, அவள் குடித்திருப்பதாக நினைத்துக்கொண்டு கடுமையான ஆலோசனையைக் கொடுத்தார்

    • மத் 16:21-23—அப்போஸ்தலன் பேதுருவுக்கு எல்லா உண்மைகளும் தெரியாததால், யெகோவா விரும்புவதைச் செய்வதற்குப் பதிலாக சாத்தான் விரும்புவதைச் செய்யும்படி இயேசுவுக்கு ஆலோசனை கொடுத்தார்

ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு வழிநடத்துதலுக்காக நாம் ஏன் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்?

சங் 32:8; 73:23, 24; நீதி 3:5, 6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யாத் 3:13-18—இஸ்ரவேலர்கள் கேள்வி கேட்டால் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள மோசே யெகோவாவிடம் உதவி கேட்டார்

    • 1ரா 3:5-12—இளம் சாலொமோன் ராஜா தன்னுடைய சொந்த புத்தியை நம்புவதற்குப் பதிலாக யெகோவாவிடம் ஞானத்தைக் கேட்டார், இதனால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார்

நம்முடைய ஆலோசனைகள் ஏன் எப்போதும் பைபிளின் அடிப்படையில் இருக்க வேண்டும்?

சங் 119:24, 105; நீதி 19:21; 2தீ 3:16, 17

இதையும் பாருங்கள்: உபா 17:18-20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 4:1-11—சாத்தான் சோதித்தபோது இயேசு தன்னுடைய சொந்த ஞானத்தை அல்ல, கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தித்தான் பதில் தந்தார்

    • யோவா 12:49, 50—தன்னுடைய அப்பாவிடம் என்ன கற்றுக்கொண்டாரோ அதைத்தான் இயேசு மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்; நாமும் அதைத்தான் செய்ய வேண்டும்

ஆலோசனை கொடுக்கும்போது நாம் ஏன் சாந்தமாக நடந்துகொள்ள வேண்டும்? அதேசமயத்தில், மனதார பாராட்டவும் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?

கலா 6:1; கொலோ 3:12

இதையும் பாருங்கள்: ஏசா 9:6; 42:1-3; மத் 11:28, 29

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 19:2, 3—யோசபாத் ராஜா தவறு செய்தபோது ஒரு தீர்க்கதரிசி மூலமாக யெகோவா அவரைக் கண்டித்தார்; அதேசமயத்தில், அவர் செய்த நல்லதுக்காக அவரைப் பாராட்டவும் செய்தார்

    • வெளி 2:1-4, 8, 9, 12-14, 18-20—சபைகளுக்கு ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு இயேசு முதலில் அந்தச் சபைகளைப் பாராட்டினார்

ஒரு சகோதரர் தன்னை இன்னொரு சகோதரர் மோசடி செய்துவிட்டதாக அல்லது தன்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிவிட்டதாக நம்மிடம் வந்து சொல்லும்போது, சம்பந்தப்பட்டவரிடமே போய் தனிப்பட்ட விதமாகப் பேசச் சொல்வது ஏன் நல்லது?

மத் 18:15-17; லூ 17:3

இதையும் பாருங்கள்: லேவி 19:17

தனக்கு அநியாயம் நடந்துவிட்டதாக ஒரு சகோதரர் உணரும்போது, இரக்கத்தையும் பொறுமையையும் காட்டும்படியும் மன்னிக்கும்படியும் நாம் எப்படி அவரை உற்சாகப்படுத்தலாம்?

மத் 18:21, 22; மாற் 11:25; லூ 6:36; எபே 4:32; கொலோ 3:13

இதையும் பாருங்கள்: மத் 6:14; 1கொ 6:1-8; 1பே 3:8, 9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 18:23-35—மற்றவர்களை மன்னிப்பது ஏன் ரொம்ப முக்கியம் என்பதைப் புரிய வைக்க இயேசு ஒரு வலிமையான உதாரணத்தைச் சொன்னார்

ஆலோசனை கொடுக்கும்போது நாம் யெகோவாவின் பக்கம் உறுதியாக இருப்பது ஏன் முக்கியம்?

சங் 141:5; நீதி 17:10; 2கொ 7:8-11

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 15:23-29—சாமுவேல் தீர்க்கதரிசி, சவுல் ராஜாவைப் பார்த்துப் பயப்படாமல் தைரியமாக ஆலோசனை கொடுத்தார்

    • 1ரா 22:19-28—மிகாயா தீர்க்கதரிசி மிரட்டப்பட்டார், அடித்துத் துன்புறுத்தப்பட்டார்; ஆனாலும், ஆகாப் ராஜாவுக்கு எதிரான எச்சரிப்பு செய்தியை அவர் மாற்றிச் சொல்லவில்லை

யெகோவாவோடு ஒருவருக்கு இருக்கும் பந்தம் பாதிக்கப்படாத விதத்தில் நாம் எப்படி அவருக்கு ஆலோசனை கொடுக்கலாம்?

எபி 12:11-13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 22:31-34—அப்போஸ்தலன் பேதுரு பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும் தன்னைத் திருத்திக்கொள்வார் என்றும், மற்றவர்களைப் பலப்படுத்துவார் என்றும் இயேசு நம்பினார்

    • பிலே 21—கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்ற ஆலோசனையை பிலேமோன் கேட்டு நடப்பார் என்று பவுல் நம்பினார்

சோர்ந்துபோயிருக்கும் அல்லது நொந்துபோயிருக்கும் ஒருவருக்கு ஆலோசனை கொடுக்கும்போது நாம் எப்படி அன்பாக நடந்துகொள்ளலாம்?

யாராவது தவறு செய்துவிட்டால், மறுபடியும் யெகோவாவிடம் நெருங்கிவர அவருக்கு உதவி செய்வதுதான் நம்முடைய நோக்கம் என்று எப்படிக் காட்டலாம்?

ஆண், பெண், சிறியவர், பெரியவர் என எப்படிப்பட்டவருக்கு நாம் ஆலோசனை கொடுத்தாலும் சரி, அவரை எப்படி மரியாதையோடு நடத்தலாம்?

பைபிள் அடிப்படையிலான ஆலோசனையை ஒருவர் திரும்பத் திரும்ப அலட்சியம் செய்யும்போது மூப்பர்கள் ஏன் இன்னும் உறுதியாகச் செயல்பட வேண்டும்?

1கொ 5:9, 11, 13; 1தீ 5:20; தீத் 3:10

இதையும் பாருங்கள்: “சபை நீக்கம்