Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடிப்பது

குடிப்பது

மதுபானங்களைக் குடிக்கவே கூடாது என்று பைபிள் சொல்கிறதா?

சங் 104:14, 15; பிர 9:7; 10:19; 1தீ 5:23

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோவா 2:1-11—ஒரு கல்யாண விருந்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அவமானம் வந்துவிடக் கூடாது என்று நினைத்து தண்ணீரைத் தரமான திராட்சமதுவாக இயேசு மாற்றினார்; அவர் செய்த முதல் அற்புதமே இதுதான்

அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் குடித்து வெறிப்பதும் ஏன் ஆபத்தானது?

குடிவெறியைக் கடவுளுடைய ஊழியர்கள் ஒரு சாதாரண விஷயமாகப் பார்க்கிறார்களா?

1கொ 5:11; 6:9, 10; எபே 5:18; 1தீ 3:2, 3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 9:20-25—நோவா குடித்து வெறித்ததால் அவருடைய பேரன் ஒரு மோசமான பாவத்தைச் செய்வதற்குக் காரணமாகிவிட்டார்

    • 1சா 25:2, 3, 36—வெட்கக்கேடாக நடந்துவந்த ஒரு முரடனும் முட்டாளும்தான் நாபால்; அவன் போதை தலைக்கேறும் அளவுக்குக் குடித்துக்கொண்டு இருந்தான்

    • தானி 5:1-6, 22, 23, 30, 31—பெல்ஷாத்சார் ராஜா அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு யெகோவாவை ரொம்பவே அவமதித்தான்; அதே ராத்திரி அவன் கொல்லப்பட்டான்

நாம் குடிவெறி அளவுக்குக் குடிக்காவிட்டாலும், எவ்வளவு குடிக்கிறோம் என்பதில் ஏன் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும்?

நீதி 23:20; ஏசா 5:11; லூ 21:34; 1தீ 3:8

இதையும் பாருங்கள்: 1பே 4:3

அளவுக்கு அதிகமாகக் குடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டுவந்த ஒருவருக்கு நீங்கள் எப்படி உதவியாக இருக்கலாம்?