Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உற்சாகம்

உற்சாகம்

கடவுளுடைய ஊழியர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது ஏன் முக்கியம்?

ஏசா 35:3, 4; கொலோ 3:16; 1தெ 5:11; எபி 3:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 32:2-8—அசீரியர்கள் தாக்க வந்தபோது, தைரியமாக இருக்கச் சொல்லி எசேக்கியா ராஜா தன் மக்களை உற்சாகப்படுத்தினார்

    • தானி 10:2, 8-11, 18, 19—தள்ளாத வயதில் தெம்பு இல்லாமல் இருந்த தானியேல் தீர்க்கதரிசியை ஒரு தேவதூதர் உற்சாகப்படுத்தினார், பலப்படுத்தினார்

மூப்பர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

ஏசா 32:1, 2; 1பே 5:1-3

இதையும் பாருங்கள்: மத் 11:28-30

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • உபா 3:28; 31:7, 8—யெகோவா சொன்னபடியே, அடுத்த தலைவரான யோசுவாவுக்கு மோசே ஊக்கமும் தைரியமும் கொடுத்தார்

    • அப் 11:22-26; 14:22—துன்புறுத்தல் சமயத்தில் அந்தியோகியாவில் இருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலர்களான பவுலும் பர்னபாவும் உற்சாகப்படுத்தினார்கள்

மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு அவர்களை மனதார பாராட்டுவதும் ஏன் முக்கியம்?

நீதி 31:28, 29; 1கொ 11:2

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • நியா 11:37-40—யெகோவாவின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துவிட்ட யெப்தாவின் மகளைப் பாராட்டுவதற்காக இஸ்ரவேல் பெண்கள் வருஷா வருஷம் அவளைப் போய்ப் பார்த்தார்கள்

    • வெளி 2:1-4—எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களை இயேசு கண்டித்துத் திருத்த வேண்டியிருந்த சமயத்தில்கூட, அவர்கள் செய்துவந்த சில நல்ல விஷயங்களுக்காக அவர்களைப் பாராட்டினார்

நாம் எப்படி நம் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தலாம்?

நீதி 15:23; எபே 4:29; பிலி 1:13, 14; கொலோ 4:6; 1தெ 5:14

இதையும் பாருங்கள்: 2கொ 7:13, 15, 16

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 23:16-18—யோனத்தான், பிரச்சினையில் தவித்த தன் நண்பன் தாவீதைத் தேடிப் போய்ப் பார்த்து அவரை உற்சாகப்படுத்தினார்

    • யோவா 16:33—இயேசு தன் முன்மாதிரியின் மூலம் தன் சீஷர்களை உற்சாகப்படுத்தினார்; தன்னைப் போலவே அவர்களாலும் இந்த உலகத்தை ஜெயிக்க முடியுமென்று சொல்லிப் பலப்படுத்தினார்

    • அப் 28:14-16—விசாரணைக்காக ரோமுக்குப் போகும் வழியில் தன்னை உற்சாகப்படுத்த வந்த சகோதரர்களைப் பார்த்து பவுல் தைரியம் அடைந்தார்

அவமரியாதையாக நடந்துகொள்வதையும் குறை சொல்வதையும் தவிர்ப்பது ஏன் முக்கியம்?

பிலி 2:14-16; யூ 16-19

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எண் 11:10-15—மக்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் புலம்பிக்கொண்டும் இருந்ததால் மோசே ரொம்பவே சோர்ந்துபோனார்

    • எண் 13:31, 32; 14:2-6—உளவு பார்த்துவிட்டு வந்த பத்துப் பேர் விசுவாசம் இல்லாமல் பேசியதால் மக்கள் சோர்ந்துபோனார்கள், சீக்கிரத்தில் கலகமும் செய்தார்கள்

சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிடுவது நமக்கு எப்படித் தைரியத்தைக் கொடுக்கும்?

நீதி 27:17; ரோ 1:11, 12; எபி 10:24, 25; 12:12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 20:1-19—ஒரு பெரிய படை தாக்க வந்தபோது யோசபாத் ராஜா தன் மக்களோடு ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்தார்

    • அப் 12:1-5, 12-17—அப்போஸ்தலன் யாக்கோபு கொல்லப்பட்ட பிறகும், அப்போஸ்தலன் பேதுரு சிறையில் தள்ளப்பட்ட பிறகும், எருசலேமில் இருந்த சகோதரர்கள் ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்தார்கள்

நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது, கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள நமக்குப் பலம் கொடுக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?

அப் 5:40, 41; ரோ 8:35-39; 1கொ 4:11-13; 2கொ 4:16-18; 1பே 1:6, 7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 39:19-23; 40:1-8—பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, அநியாயமாகச் சிறையில் தள்ளப்பட்டபோதும் யோசேப்பு கடவுள்மேல் நம்பிக்கையாகவே இருந்தார், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் ஆசைப்பட்டார்

    • 2ரா 6:15-17—ஒரு படை திரண்டு வந்தபோது எலிசா பயப்படவில்லை, தன் ஊழியனும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பதற்காக ஜெபம் செய்தார்

யெகோவாவின் வார்த்தை தரும் உற்சாகம்

நமக்கு உதவி செய்வதாக யெகோவா எப்படியெல்லாம் உறுதி அளித்திருக்கிறார்?

யெகோவா காட்டும் பொறுமையையும் இரக்கத்தையும் பற்றி யோசித்துப் பார்ப்பது நமக்கு எப்படி உற்சாகம் தரும்?

சோர்ந்துபோனவர்களுக்கு யெகோவா என்ன செய்வார்?

சங் 46:1; ஏசா 12:2; 40:29-31; பிலி 4:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 1:10, 11, 17, 18—அன்னாள் மனமுடைந்துபோயிருந்த சமயத்தில் ஜெபம் செய்தாள், யெகோவா அவளுக்கு மன நிம்மதியைக் கொடுத்தார்

    • 1ரா 19:1-19—எலியா தீர்க்கதரிசி சோர்ந்துபோயிருந்தபோது யெகோவா அவருக்கு உணவும் தண்ணீரும் தந்தார்; அதோடு, எதிர்கால நம்பிக்கையைப் பற்றிச் சொல்லி அவருக்கு உற்சாகமும் ஆறுதலும் தந்தார்

பைபிள் தரும் வாக்குறுதிகள் நமக்கு எப்படித் தைரியத்தைக் கொடுக்கின்றன?

2நா 15:7; சங் 27:13, 14; எபி 6:17-19; 12:2

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோபு 14:1, 2, 7-9, 13-15—யோபு ரொம்பவே சோர்ந்துபோயிருந்த சமயத்தில்கூட, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நினைத்து ஆறுதல் அடைந்தார்

    • தானி 12:13—கிட்டத்தட்ட 100 வயதை எட்டியிருந்த தானியேல், எதிர்காலத்தில் அவருக்கு ஆசீர்வாதம் கிடைக்கப்போவதாக ஒரு தேவதூதர் சொன்னபோது உற்சாகம் அடைந்தார்

யெகோவாவிடம் ஜெபம் செய்வதும் அவரைப் பற்றி ஆழமாக யோசிப்பதும் நமக்கு எப்படி உற்சாகத்தைக் கொடுக்கும்?

சங் 18:6; 56:4, 11; எபி 13:6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 30:1-9—வேதனையில் தவித்தபோது தாவீது ராஜா யெகோவாவிடம் ஜெபம் செய்தார், பலம் பெற்றார்

    • லூ 22:39-43—உச்சக்கட்ட சோதனையின்போது இயேசு உருக்கமாக ஜெபம் செய்தார், அப்போது யெகோவா ஒரு தூதரை அனுப்பி இயேசுவை உற்சாகப்படுத்தினார்

நல்ல செய்தியைக் கேட்கும்போது நமக்கு எப்படி உற்சாகம் கிடைக்கிறது, அதை மற்றவர்களுக்குச் சொல்வது ஏன் நல்லது?

நீதி 15:30; 25:25; ஏசா 52:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 15:2-4—பவுலும் பர்னபாவும் தாங்கள் சந்தித்த சபைகளை ரொம்ப உற்சாகப்படுத்தினார்கள்

    • 3யோ 1-4—சத்தியத்தைத் தன்னிடம் கற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையாக நடப்பதைக் கேள்விப்பட்டபோது வயதான அப்போஸ்தலன் யோவான் ரொம்ப உற்சாகம் அடைந்தார்