Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

யெகோவாவின் ஊழியர்களுக்கு சகிப்புத்தன்மை தேவையா?

நாம் சொல்லும் செய்தியைச் சிலர் காதில் வாங்க மாட்டார்கள், எதிர்க்கக்கூட செய்வார்கள் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?

மத் 10:22; யோவா 15:18, 19; 2கொ 6:4, 5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2பே 2:5; ஆதி 7:23; மத் 24:37-39—நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்’; ஆனாலும், அவர் சொன்னதை மக்கள் தங்களுடைய காதில் வாங்கவே இல்லை; அதனால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் மட்டும்தான் பெருவெள்ளத்தில் தப்பித்தார்கள்

    • 2தீ 3:10-14—பவுல் தன்னுடைய உதாரணத்தையே சொல்லி, சகித்திருக்கும்படி தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார்

நம் குடும்பத்தாரே நம்மை எதிர்க்கும்போது நாம் ஏன் ஆச்சரியப்படுவது இல்லை?

மத் 10:22, 36-38; லூ 21:16-19

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 4:3-11; 1யோ 3:11, 12—காயீன் பொல்லாதவனாக இருந்ததால் நீதிமானாக இருந்த தன் தம்பி ஆபேலைக் கொன்றுபோட்டான்

    • ஆதி 37:5-8, 18-28—யெகோவா தனக்குக் காட்டிய ஒரு கனவைப் பற்றி யோசேப்பு தன் அண்ணன்களிடம் சொன்னபோது, அவர்கள் யோசேப்பை ஒரு தொட்டிக்குள் தள்ளிவிட்டார்கள், பிறகு ஒரு அடிமையாக விற்றுவிட்டார்கள்

துன்புறுத்தல் வரும்போது நாம் ஏன் சாவை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை?

மத் 10:28; 2தீ 4:6, 7

இதையும் பாருங்கள்: வெளி 2:10

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • தானி 3:1-6, 13-18—தங்கச் சிலையை வணங்காவிட்டால் கொன்றுவிடுவதாக ராஜா மிரட்டியபோதும், சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும் அதை வணங்கவில்லை

    • அப் 5:27-29, 33, 40-42—தொடர்ந்து பிரசங்கித்தால் கொலை செய்துவிடுவதாகச் சிலர் மிரட்டியபோதும்கூட அப்போஸ்தலர்கள் பிரசங்கிப்பதை விடவில்லை

கண்டித்துத் திருத்தப்படும்போதும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க எது நமக்கு உதவும்?

நீதி 3:11, 12; எபி 12:5-7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எண் 20:9-12; உபா 3:23-28; 31:7, 8—யெகோவா கண்டித்தபோது மோசே ரொம்ப வேதனைப்பட்டிருப்பார், ஆனாலும் கடைசிவரை உண்மையோடு சகித்திருந்தார்

    • 2ரா 20:12-18; 2நா 32:24-26—எசேக்கியா ராஜா பாவம் செய்தபோது கண்டிக்கப்பட்டார்; ஆனால், மனத்தாழ்மையோடு அந்தக் கண்டிப்பை ஏற்றுக்கொண்டு யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்தார்

மற்றவர்கள் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடக்கும்போது, சகிப்புத்தன்மையைக் காட்டுவது நமக்கு ஏன் ஒரு சவாலாக இருக்கலாம்?

எரே 1:16-19; ஆப 1:2-4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 73:2-24—பொல்லாதவர்கள் நிம்மதியோடும் செல்வச் செழிப்போடும் இருப்பதைப் பார்த்தபோது, யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்வதால் என்ன பிரயோஜனம் என்று சங்கீதக்காரன் யோசித்தார்

    • யோவா 6:60-62, 66-68—இயேசுவைப் பின்பற்றுவதை நிறைய பேர் விட்டுவிட்டார்கள்; ஆனால், விசுவாசத்தோடு தொடர்ந்து சகித்திருக்க அப்போஸ்தலன் பேதுரு தீர்மானமாக இருந்தார்

சகித்திருக்க எதுவெல்லாம் நமக்கு உதவும்?

யெகோவாவை உறுதியாகப் பிடித்துக்கொள்வது

பைபிளைப் படிப்பதும், படித்ததை ஆழமாக யோசிப்பதும்

யெகோவாவிடம் அடிக்கடி மனம்விட்டுப் பேசுவது

ரோ 12:12; கொலோ 4:2; 1பே 4:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • தானி 6:4-11—தன் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் என்று தெரிந்திருந்தும் தானியேல் தன் வழக்கப்படி விடாமல் ஜெபம் செய்தார்

    • மத் 26:36-46; எபி 5:7—இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த கடைசி ராத்திரியில் ரொம்ப உருக்கமாக ஜெபம் செய்தார், அப்படிச் செய்யும்படி மற்றவர்களிடமும் சொன்னார்

யெகோவாவை வணங்க சகோதர சகோதரிகளோடு தவறாமல் கூடிவருவது

எதிர்காலத்தில் யெகோவா தரப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பது

யெகோவா மீதும், அவருடைய நீதிநெறிகள் மீதும், சகோதர சகோதரிகள் மீதும் இருக்கும் அன்பைப் பலப்படுத்துவது

நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவது

கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சரியான மனநிலையோடு இருப்பது

உண்மையோடு சகித்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

யெகோவாவுக்கு மகிமை சேர்ப்போம்

நீதி 27:11; யோவா 15:7, 8; 1பே 1:6, 7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோபு 1:6-12; 2:3-5—யோபுவின் உத்தமத்தைக் குறித்து சாத்தான் யெகோவாவிடம் சவால்விட்டான்; அவன் சொன்னது பொய் என்பதை நிரூபிக்க யோபு உண்மையோடு சகித்திருக்க வேண்டியிருந்தது

    • ரோ 5:19; 1பே 1:20, 21—ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனான்; ஆனால், இயேசு மரணம்வரை உண்மையோடு சகித்திருந்தார்; உச்சக்கட்ட சோதனையின்போதும் ஒரு பரிபூரண மனிதனால் யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க முடியுமா என்ற கேள்விக்குப் பதில் தந்தார்

சகித்திருக்க மற்றவர்களுக்கு உற்சாகம் கிடைக்கும்

ஊழியத்தில் நல்ல பலன் கிடைக்கும்

யெகோவா சந்தோஷப்படுவார், பலன் தருவார்