Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலக நட்பு

உலக நட்பு

இன்று உலகத்தை ஆட்சி செய்வது யார்?

எபே 2:2; 1யோ 5:19

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 4:5-8—உலகத்தையே ஆட்சி செய்யும் அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாக சாத்தான் சொன்னான்; அவனுக்கு அந்த அதிகாரம் இருப்பதை இயேசு மறுக்கவில்லை

இந்த உலகத்தோடு நட்பு வைத்துக்கொள்ள நாம் விரும்பினால் யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்புக்கு என்னவாகும்?

யாக் 4:4; 1யோ 2:15, 16

இதையும் பாருங்கள்: யாக் 1:27

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 18:1-3; 19:1, 2—கெட்ட ராஜாவான ஆகாபோடு நட்பு வைத்துக்கொண்டதால் நல்ல ராஜாவான யோசபாத்தை யெகோவா கண்டித்தார்

இந்த உலகத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நமக்கு எப்படி உதவும்?

பாருங்கள்: “நண்பர்கள்

பணத்தையும் பொருளையும் இந்த உலகத்தார் பார்க்கும் விதமாக நாம் ஏன் பார்ப்பதில்லை?

பாருங்கள்: “பொருளாசை

நாம் ஏன் இந்த உலகத்தார் செய்வதுபோல் ஒழுக்கங்கெட்ட ஆசைகளுக்கு இடம் கொடுப்பதில்லை?

ஆண்களையோ பெண்களையோ அமைப்புகளையோ அளவுக்கு அதிகமாகக் கவுரவிப்பதைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்?

மத் 4:10; ரோ 1:25; 1கொ 10:14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 12:21-23—மக்கள் தன்னைத் தெய்வமாக வணங்கியதை முதலாம் ஏரோது அகிரிப்பா ராஜா ஏற்றுக்கொண்டதால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்

    • வெளி 22:8, 9—பலம்படைத்த ஒரு தேவதூதரின் காலில் அப்போஸ்தலன் யோவான் விழுந்தபோது, அந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்ள அந்தத் தேவதூதர் மறுத்துவிட்டார்; யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று சொன்னார்

அரசியல், தேசப்பற்று விஷயங்களில் கிறிஸ்தவர்கள் ஏன் நடுநிலையோடு இருக்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் ஏன் மற்ற மதங்களோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்வதில்லை?

பாருங்கள்: “கலப்பு விசுவாசம்

யெகோவாவின் சட்டதிட்டங்களை இந்த உலகத்தாரைப் போல நாம் ஏன் அலட்சியம் செய்வதில்லை?

லூ 10:16; கொலோ 2:8; 1தெ 4:7, 8; 2தீ 4:3-5

இதையும் பாருங்கள்: லூ 7:30

கிறிஸ்துவின் சீஷர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கிறது, துன்புறுத்துகிறது?

இந்த உலகக் காரியங்கள்மேல் ஆசை வைப்பது ஏன் முட்டாள்தனமானது?

யெகோவாவை வணங்காதவர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் எப்படி அன்பு காட்டுகிறார்கள்?

அரசாங்க சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கிறிஸ்தவர்கள் ஏன் மதிப்புக் காட்ட வேண்டும்?

மத் 22:21; ரோ 13:1-7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 25:8; 26:2, 25—பவுல் அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தார், அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுத்தார்