Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துக்கம்

துக்கம்

ஒருவர் இறக்கும்போது நாம் துக்கப்படுவது இயல்புதான் என்பதை எந்த பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன?

துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தர யெகோவா ஏங்குகிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

இறந்தவர்களின் நிலைமையைப் பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி ஆறுதல் தருகிறது?

பிர 9:5, 10; 1தெ 4:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 20:37, 38—இறந்தவர்கள் உயிரோடு வரப்போவது ரொம்ப உறுதி என்பதால் அவர்கள் யெகோவாவின் பார்வையில் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்று இயேசு சொன்னார்

    • யோவா 11:5, 6, 11-14—இயேசு தன்னுடைய நெருங்கிய நண்பரான லாசரு இறந்தபோது, மரணத்தைத் தூக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்

    • எபி 2:14, 15—நாம் மரண பயத்துக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டியதில்லை என்று பவுல் சொன்னார்

ஒருவர் பிறக்கும் சமயத்தைவிட இறக்கும் சமயத்தில் யெகோவாவுக்கு இன்னும் அதிக மதிப்புள்ளவராக ஆகிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

மரணத்தை பைபிள் எப்படி விவரிக்கிறது, மரணத்தைக் கடவுள் என்ன செய்யப்போகிறார்?

எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

ஏசா 26:19; யோவா 5:28, 29; அப் 24:15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • இந்தப் பூமியில் இறந்துபோன எட்டுப் பேர் மறுபடியும் உயிரோடு எழுப்பப்பட்டதாக பைபிள் சொல்கிறது; இயேசு பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்பட்டதைப் பற்றியும் சொல்கிறது; அன்பானவர்களைப் பறிகொடுத்துத் தவிக்கிறவர்களுக்கு இந்த ஒவ்வொரு பதிவும் ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும்

      • 1ரா 17:17-24—சீதோனில் இருந்த சாறிபாத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகனை எலியா தீர்க்கதரிசி உயிரோடு எழுப்பினார்

      • 2ரா 4:32-37—சூனேம் ஊரில் இருந்த ஒரு பையனை எலிசா தீர்க்கதரிசி உயிரோடு எழுப்பி, அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தார்

      • 2ரா 13:20, 21—இறந்துபோன ஒருவனின் உடல் எலிசா தீர்க்கதரிசியின் எலும்புகள்மேல் பட்டதுமே உயிர் பெற்றது, அவன் எழுந்து நின்றான்

      • லூ 7:11-15—நாயீன் நகரத்துக்கு இயேசு போனபோது, ஒரு விதவையின் மகனை அடக்கம் செய்வதற்காக அவனைச் சிலர் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்தார், அவனை உயிரோடு எழுப்பினார்

      • லூ 8:41, 42, 49-56—ஜெபக்கூடத் தலைவரான யவீருவின் மகளை இயேசு உயிரோடு எழுப்பினார்

      • யோவா 11:38-44—இயேசு தன் நெருங்கிய நண்பரான லாசருவை உயிரோடு எழுப்பி, அவருடைய சகோதரிகளான மார்த்தாளிடமும் மரியாளிடமும் ஒப்படைத்தார்

      • அப் 9:36-42—நிறைய தானதர்மங்கள் செய்ததற்குப் பெயர்பெற்றிருந்த தொற்காள் என்ற அன்பான கிறிஸ்தவச் சகோதரியை பேதுரு உயிரோடு எழுப்பினார்

      • அப் 20:7-12—ஜன்னலிலிருந்து கீழே விழுந்து இறந்துபோன ஐத்திகு என்ற இளைஞனை பவுல் உயிரோடு எழுப்பினார்

    • யெகோவா இயேசுவைப் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பி சாவாமையைத் தந்தார்; இது, எதிர்காலம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறது

    • இயேசுதான் முதன்முதலில் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்பட்டு சாவாமையைப் பெற்றார், ஆனால் அவர் கடைசி கிடையாது; பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேரும் அவரைப் போலவே பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள்

அன்பானவர்களை மரணத்தில் இழந்து தவிக்கிறவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?