Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இதயம்

இதயம்

இதயம் என்று பைபிள் சொல்லும்போது நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை, அதாவது நம் யோசனைகள், விருப்பங்கள், குணங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றை, குறிக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?

சங் 49:3; நீதி 16:9; லூ 5:22; அப் 2:26

இதையும் பாருங்கள்: உபா 15:7; சங் 19:8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 9:46-48—முதலிடம் பெற அப்போஸ்தலர்கள் துடித்ததை இயேசு தெரிந்துகொண்டு அவர்களுடைய எண்ணத்தைத் திருத்தினார்

நம் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்வது ஏன் முக்கியம்?

1நா 28:9; நீதி 4:23; எரே 17:9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 6:5-7—இதயத்தில் மோசமான எண்ணங்கள் இருந்ததால் மனிதர்கள் வன்முறையில் இறங்கினார்கள், அதனால் கடவுள் பெருவெள்ளத்தைக் கொண்டுவந்தார்

    • 1ரா 11:1-10—சாலொமோன் ராஜா தன் இதயத்தைப் பாதுகாக்காமல் போய்விட்டார்; அவர் கல்யாணம் செய்திருந்த மற்ற தேசத்துப் பெண்கள் அவருடைய இதயத்தை யெகோவாவைவிட்டு வழிவிலகச் செய்துவிட்டார்கள்

    • மாற் 7:18-23—கடவுளுடைய பார்வையில் ஒருவரைத் தீட்டுப்படுத்தும் எல்லாமே இதயத்திலிருந்துதான் வருகின்றன என்று இயேசு சொன்னார்

நம் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

சங் 19:14; நீதி 3:3-6; லூ 21:34; பிலி 4:8

இதையும் பாருங்கள்: எஸ்றா 7:8-10; சங் 119:11

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எபே 6:14-18; 1தெ 5:8—மார்புக் கவசம் எப்படி ஒருவருடைய நிஜமான இதயத்தைப் பாதுகாக்குமோ அப்படித்தான் நீதியும் விசுவாசமும் அன்பும் ஒருவருடைய அடையாளப்பூர்வ இதயத்தைப் பாதுகாக்கும் என்று பவுல் சொல்கிறார்

நம் இதயத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று நாம் எப்படித் தெரிந்துகொள்வது?

நீதி 21:2-4; எபி 3:12

இதையும் பாருங்கள்: நீதி 6:12-14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 25:1, 2, 17-27—அமத்சியா ராஜா கொஞ்சக் காலம் யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவந்தார், ஆனால் முழு இதயத்தோடு செய்யவில்லை; பிற்பாடு, தலைக்கனத்தோடு யெகோவாவின் பேச்சை மீறியதால் மோசமான விளைவுகளைச் சந்தித்தார்

    • மத் 7:17-20—மரம் கெட்டதாக இருந்தால் அதன் கனிகளும் கெட்டதாக இருக்கும், அதேபோல் நம் இதயம் மோசமாக இருந்தால் நம் செயல்களும் மோசமாக இருக்கும் என்று இயேசு விளக்கினார்

நமக்கு ஏன் நல்ல இதயம் தேவை, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நீதி 10:8; 15:28; லூ 6:45

இதையும் பாருங்கள்: சங் 119:97, 104; ரோ 12:9-16; 1தீ 1:5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2ரா 20:1-6—எசேக்கியா ராஜா மரணப் படுக்கையில் இருந்தபோது, அவ்வளவு காலம் அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததற்காக இரக்கம் காட்டச் சொல்லி யெகோவாவிடம் கதறி அழுதார்

    • மத் 21:28-32—என்ன செய்யப்போவதாகச் சொல்கிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதுதான் நமக்கு எப்படிப்பட்ட இதயம் இருக்கிறது என்பதைக் காட்டும்; இரண்டு மகன்களைப் பற்றிய ஒரு உதாரணத்தின் மூலம் இதை இயேசு விளக்கினார்

யெகோவா நம் இதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது ஏன் ஆறுதல் தருகிறது?

1நா 28:9; எரே 17:10

இதையும் பாருங்கள்: 1சா 2:3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 16:1-13—யெகோவா வெளித்தோற்றத்தைப் பார்ப்பதில்லை, ஒருவருடைய இதயத்தைத்தான் பார்க்கிறார் என்பதை சாமுவேல் தீர்க்கதரிசி புரிந்துகொண்டார்

    • 2நா 6:28-31—மனிதனின் இதயத்தில் இருப்பதை யெகோவா ரொம்ப சரியாகத் தெரிந்துகொண்டு இரக்கம் காட்டுகிறார் என்பதை ஆலய அர்ப்பண விழாவில் சாலொமோன் செய்த ஜெபம் காட்டுகிறது