Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனத்தாழ்மை

மனத்தாழ்மை

மனத்தாழ்மை உள்ளவர்களையும் தலைக்கனம் பிடித்தவர்களையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார்?

சங் 138:6; நீதி 15:25; 16:18, 19; 22:4; 1பே 5:5

இதையும் பாருங்கள்: நீதி 29:23; ஏசா 2:11, 12, 16

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 26:3-5, 16-21—உசியா ராஜாவுக்கு ஆணவம் தலைக்கேறியதால் கடவுளுடைய சட்டத்தை மீறினார்; கண்டிக்கப்பட்டபோது பயங்கரமாகக் கோபப்பட்டார்; அதனால், கடவுள் அவரைத் தொழுநோயால் தண்டித்தார்

    • லூ 18:9-14—பெருமைபிடித்தவர்களின் ஜெபத்தையும் தாழ்மையானவர்களின் ஜெபத்தையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதை விளக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்

மனத்தாழ்மையோடும் உண்மையோடும் ஒருவர் மனம் திருந்தும்போது யெகோவா என்ன செய்கிறார்?

2நா 7:13, 14; சங் 51:2-4, 17

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 12:5-7—ரெகொபெயாம் ராஜாவும் யூதாவின் அதிகாரிகளும் யெகோவாவின் முடிவைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு மனம் திருந்தினார்கள், அதனால் யெகோவா அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்

    • 2நா 32:24-26—நல்ல ராஜாவான எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்துவிட்டது; ஆனால், அவர் மனம் திருந்தி தாழ்மையாக நடந்துகொண்டபோது யெகோவா அவரை மன்னித்தார்

மனத்தாழ்மை காட்டுவது, மற்றவர்களோடு இருக்கும் நம் பந்தத்தை எப்படிப் பலப்படுத்தும்?

எபே 4:1, 2; பிலி 2:3; கொலோ 3:12, 13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 33:3, 4—முன்பு தன்மேல் கோபமாக இருந்த தன் அண்ணன் ஏசாவைப் பார்த்தபோது யாக்கோபு ரொம்பவே மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்; அதனால், இரண்டு பேரும் சமாதானமானார்கள்

    • நியா 8:1-3—எப்பிராயீம் வீரர்கள் தன்னைவிட மேலானவர்கள் என்று கிதியோன் சொன்னதால் அவர்களுடைய கோபம் தணிந்தது, அதற்குமேல் அவர்கள் சண்டை போடவில்லை

மனத்தாழ்மை காட்டுவது முக்கியம் என்பதை இயேசு எப்படிக் கற்றுக்கொடுத்தார்?

மத் 18:1-5; 23:11, 12; மாற் 10:41-45

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஏசா 53:7; பிலி 2:7, 8—தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது போலவே, இந்தப் பூமிக்கு வரும் நியமிப்பை இயேசு மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்; அவமானப்பட்டும் வேதனைப்பட்டும் சாவதற்குக்கூடத் தயாராக இருந்தார்

    • லூ 14:7-11—விருந்தில் முக்கியமான இடங்களில் உட்கார விருந்தினர்கள் விரும்புவதை உதாரணமாகச் சொல்லி, மனத்தாழ்மை காட்டுவதால் வரும் நன்மையை இயேசு விளக்கினார்

    • யோவா 13:3-17—ஒரு அடிமை செய்ய வேண்டிய வேலையைச் செய்வதன் மூலம், அதாவது அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம், மனத்தாழ்மையோடு இருக்க இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுத்தந்தார்

நம்மையும் மற்றவர்களையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்ப்பது, மனத்தாழ்மையைக் காட்ட நமக்கு எப்படி உதவும்?

போலியாகத் தாழ்மை காட்டுவதில் ஏன் பிரயோஜனமே இல்லை?