Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளாசை

பொருளாசை

பணமும் பொருளும் வைத்திருப்பதே தவறு என்று பைபிள் சொல்கிறதா?

பிர 7:12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 3:11-14—சாலொமோன் ராஜா மனத்தாழ்மையோடு இருந்ததால் யெகோவா நிறைய சொத்துகளைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்தார்

    • யோபு 1:1-3, 8-10—யோபு பெரிய பணக்காரராக இருந்தார்; ஆனாலும், யெகோவாவோடு இருந்த பந்தத்தைத்தான் பொக்கிஷமாக நினைத்தார்

பணம் பொருளைச் சேர்ப்பது ஏன் உண்மையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தராது?

எந்தச் சமயத்தில் சொத்துகளால் பிரயோஜனமே இருக்காது?

பணம் பொருளைச் சேர்ப்பதில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்ன?

நாம் எப்படி சொத்துப்பத்துகளை நம்பி ஏமாந்துபோகலாம்?

நீதி 11:4, 18, 28; 18:11; மத் 13:22

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 8:18-24—கிறிஸ்தவ சபையில் பணம் கொடுத்து பொறுப்புகளை வாங்கிக்கொள்ளலாம் என்று சீமோன் முட்டாள்தனமாக நினைத்தான்

பண ஆசை எதை நம்மிடமிருந்து பறித்துவிடலாம்?

மத் 6:19-21; லூ 17:31, 32

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மாற் 10:17-23—ஒரு பணக்கார வாலிபன் பணம் பொருளை ரொம்ப அதிகமாக நேசித்ததால் இயேசுவின் சீஷராகும் வாய்ப்பை இழந்துவிட்டான்

    • 1தீ 6:17-19—பணக்காரர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாது, அது கடவுளுக்குப் பிடிக்காது என்று பவுல் எச்சரித்தார்

பொருளாசை எப்படி நம் விசுவாசத்தைப் பலவீனமாக்கி, நம்மை யெகோவாவிடமிருந்து பிரித்துவிடலாம்?

உபா 8:10-14; நீதி 28:20; 1யோ 2:15-17

இதையும் பாருங்கள்: சங் 52:6, 7; ஆமோ 3:12, 15; 6:4-8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோபு 31:24, 25, 28—சொத்துகள்மேல் நம்பிக்கை வைத்தால் யெகோவாவுக்குத் துரோகம் செய்வதுபோல் ஆகிவிடும், அதனால் அது ஆபத்தானது என்பதை யோபு நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்

    • லூ 12:15-21—நிறைய சொத்துகள் இருந்தும் கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாத ஒருவனின் உதாரணத்தைச் சொல்லி பொருளாசையைப் பற்றி இயேசு எச்சரித்தார்

நாம் எப்படி உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருக்கலாம்?

எப்படிப்பட்ட சொத்துகள் பணத்தையும் பொருளையும்விட ரொம்ப முக்கியமானவை, ஏன்?

நீதி 3:11, 13-18; 10:22; மத் 6:19-21

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆகா 1:3-11—ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்குப் பதிலாகத் தங்கள் வீடுகளைக் கட்டி சவுகரியமாக வாழ்வதிலேயே குறியாக இருந்த தன் மக்களுக்குத் தன் ஆசீர்வாதம் கிடைக்காது என்று ஆகாய் தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னார்

    • வெளி 3:14-19—யெகோவாவுக்குச் செய்யும் சேவையைவிட சொத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த லவோதிக்கேயா சபையை இயேசு கண்டித்தார்

நமக்குத் தேவையானதை யெகோவா தருவார் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?