Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசமாக நடத்தப்படுவது

மோசமாக நடத்தப்படுவது

மற்றவர்களால் மோசமாக நடத்தப்படும்போது நமக்கு எப்படி இருக்கும்?

சங் 69:20; நீதி 18:14; பிர 4:1-3; மல் 2:13-16; கொலோ 3:21

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2சா 10:1-5—எதிரிகளால் ரொம்பவே அவமானப்படுத்தப்பட்ட தன் வீரர்களை தாவீது இரக்கத்தோடும் கரிசனையோடும் நடத்தினார்

    • 2சா 13:6-19—அம்னோன் தன்னைக் கெடுத்தது மட்டுமல்லாமல், தன்னைத் துரத்தியடித்து அவமானப்படுத்தியதால் தாமார் தன் அங்கியைக் கிழித்துக்கொண்டு அழுதுகொண்டே போனாள்

யாராவது மோசமாக நடத்தப்பட்டால் அது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்று எப்படிச் சொல்லலாம்? அவர் என்ன செய்வார்?

யோபு 34:21, 22; சங் 37:8, 9; ஏசா 29:15, 19-21; ரோ 12:17-21

இதையும் பாருங்கள்: சங் 63:6, 7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 25:3, 14-17, 21, 32-38—தாவீது ராஜாவைக் கொஞ்சம்கூட மதிக்காமல் நாபால் ரொம்ப அநாகரிகமாக நடந்துகொண்டான், தன் வீட்டில் இருந்த எல்லாருடைய உயிரையும் ஆபத்தில் சிக்க வைத்தான்; அதனால் அவனை யெகோவா தண்டித்தார், அவன் செத்துப்போனான்

    • எரே 20:1-6, 9, 11-13—குருவான பஸ்கூர் எரேமியாவை அடித்து தொழுமரத்தில் மாட்டியபோது எரேமியா சோர்ந்துபோனார்; ஆனால், யெகோவா எரேமியாவை உற்சாகப்படுத்தினார், காப்பாற்றினார்