Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணம்

பணம்

பண ஆசை ஏன் ஆபத்தானது?

பாருங்கள்: “பொருளாசை

குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பணம் சம்பாதிப்பதில் தவறில்லை என்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?

பிர 7:12; 10:19; எபே 4:28; 2தெ 3:10; 1தீ 5:8, 18

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 31:38-42—யாக்கோபின் சம்பளத்தை லாபான் மாற்றிக்கொண்டே இருந்தாலும், யாக்கோபு தொடர்ந்து கடினமாக உழைத்தார்; தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அவர் எடுத்த முயற்சியை யெகோவா ஆசீர்வதித்தார்

    • லூ 19:12, 13, 15-23—சம்பாதிப்பதற்காகப் பணத்தை முதலீடு செய்வது இயேசுவின் காலத்தில் வழக்கமாக இருந்தது என்பதை அவர் சொன்ன உதாரணத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்

கடன் வாங்குவதைப் பற்றியும் கடன் கொடுப்பதைப் பற்றியும் பைபிளில் என்ன நியமங்கள் இருக்கின்றன?

தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது ஏன் நல்லது?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • நெ 5:2-8—நெகேமியா காலத்தில் வாழ்ந்த சில இஸ்ரவேலர்கள், தங்களிடம் கடன் வாங்கியவர்களை ஈவிரக்கமில்லாமல் நடத்தினார்கள்

    • மத் 18:23-25—கடனைத் திருப்பிக் கொடுக்காதவர்கள் தண்டிக்கப்படலாம் என்று இயேசுவின் உதாரணம் காட்டுகிறது

விசுவாசத்தில் இல்லாதவர்கள், விசுவாசத்தில் இருப்பவர்கள், சொந்தக்காரர்கள் என யாரோடு வியாபாரம் செய்தாலும் சரி, முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 23:14-20—சாராளை அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் ஒரு நிலத்தையும் குகையையும் வாங்கினார்; எந்த மனஸ்தாபமும் சண்டையும் பிற்பாடு வந்துவிடக் கூடாது என்பதற்காக சாட்சிகள் முன்னிலையில் அதை உறுதி செய்தார்

    • எரே 32:9-12—எரேமியா தன் பெரியப்பா மகனிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கியபோது ஒரு பத்திரத்தை எழுதி, அதை நகலெடுத்தார்; சாட்சிகள் முன்னால் பணத்தை எடைபோட்டுக் கொடுத்தார்

பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்வது ஏன் நல்லது?

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சபையில் இருப்பவர்களோடு எந்தப் பிரச்சினையும் வராதபடி நாம் ஏன் பார்த்துக்கொள்ள வேண்டும்?

1கொ 6:1-8

இதையும் பாருங்கள்: ரோ 12:18; 2தீ 2:24

பணத்தை நாம் எப்படிப் பயன்படுத்தினால் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்?