Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அம்மாக்கள்

அம்மாக்கள்

அம்மாவின் பொறுப்புகள் என்ன?

நீதி 31:17, 21, 26, 27; தீத் 2:4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 21:8-12—தன்னுடைய பையன் ஈசாக்கை இஸ்மவேல் கேலி செய்ததை சாராள் பார்த்தபோது பிரச்சினைக்கு முடிவுகட்டச் சொல்லி ஆபிரகாமிடம் கெஞ்சினாள்

    • 1ரா 1:11-21—ராஜாவாக ஆவதற்கு அதோனியா ரகசியமாக முயற்சி செய்தபோது, பத்சேபாள் தன் மகன் சாலொமோனை ராஜாவாக்கச் சொல்லியும் அவனைப் பாதுகாக்கச் சொல்லியும் தாவீது ராஜாவிடம் கெஞ்சினாள்

அம்மாவுக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும், மதிப்புக் கொடுக்க வேண்டும்?

யாத் 20:12; உபா 5:16; 27:16; நீதி 1:8; 6:20-22; 23:22

இதையும் பாருங்கள்: 1தீ 5:9, 10

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1பே 3:5, 6—உறுதியான விசுவாசத்தினால் சாராள் மற்ற பெண்களுக்கு அம்மாபோல் இருப்பதாக பேதுரு சொன்னார்

    • நீதி 31:1, 15, 21, 28—லேமுவேல் ராஜாவின் அம்மா, கல்யாணத்தைப் பற்றி சில முக்கியமான அறிவுரைகளை அவருக்குக் கொடுத்தார்; குடும்பத்தில் மனைவிக்கும் அம்மாவுக்கும் இருக்கும் கவுரவமான பங்கைப் பற்றியும் சொன்னார்

    • 2தீ 1:5; 3:15—தன்னுடைய கணவர் விசுவாசத்தில் இல்லாதபோதும் ஐனிக்கேயாள் தன் மகன் தீமோத்தேயுவுக்கு சிசுப் பருவத்திலிருந்தே வேதவசனங்களைச் சொல்லிக்கொடுத்தார்; அதனால் பவுல் அவரைப் பாராட்டினார்