Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதுமை; வயதானவர்கள்

முதுமை; வயதானவர்கள்

வயதாகும்போது நமக்கு என்ன நடக்கிறது?

சங் 71:9; 90:10

இதையும் பாருங்கள்: “ஆறுதல்—வயதாவதால் அல்லது வியாதியால் நிறைய செய்ய முடியாமல் போவது

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • பிர 12:1-8—வயதாவதால் வரும் சில உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி சாலொமோன் ராஜா கவிதை நடையில் சொன்னார்; உதாரணத்துக்கு, கண்பார்வை மங்கிவிடும் (‘ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரியும்’), காது சரியாகக் கேட்காது (‘பாடல் சத்தமெல்லாம் அடங்கும்’) என்றெல்லாம் சொன்னார்

முதுமையால் வரும் பிரச்சினைகள் மத்தியிலும் வயதானவர்களால் சந்தோஷமாக இருக்க முடியுமா?

2கொ 4:16-18; யாக் 1:2-4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 12:2, 23—யெகோவாவின் மக்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை வயதான தீர்க்கதரிசி சாமுவேல் புரிந்து வைத்திருந்தார்

    • 2சா 19:31-39—தனக்கு ஆதரவாக இருந்த வயதான பர்சிலாவுக்கு தாவீது நன்றியோடு இருந்தார்; எருசலேமுக்கு வரும்படி தாவீது கூப்பிட்டபோது தன்னால் முடியாது என்று பர்சிலா அடக்கத்தோடு சொல்லிவிட்டார்

    • சங் 71:9, 18—தனக்கு வயதாகிவிட்டதால் யெகோவாவுக்கு இனி தன்னால் பிரயோஜனம் இல்லாமல் போய்விடுமோ என்று தாவீது பயந்தார்; அதனால், தன்னை ஒதுக்கித்தள்ள வேண்டாம் என்று யெகோவாவிடம் கெஞ்சினார்; அடுத்த தலைமுறைக்கு அவரைப் பற்றிச் சொல்ல தெம்பு தரும்படியும் கேட்டார்

    • லூ 2:36-38—தீர்க்கதரிசனம் சொல்லிவந்த வயதான விதவையான அன்னாள் கடவுள்பக்தி காட்டியதற்காகவும், கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்ததற்காகவும் ஆசீர்வதிக்கப்பட்டார்

யெகோவா தங்களை உயர்வாக மதிக்கிறார் என்பதை வயதானவர்கள் ஏன் உறுதியாக நம்பலாம்?

சங் 92:12-14; நீதி 16:31; 20:29; ஏசா 46:4; தீத் 2:2-5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 12:1-4—75 வயதில் ஆபிரகாமுக்கு ஒரு பெரிய பொறுப்பை யெகோவா கொடுத்தார்

    • தானி 10:11, 19; 12:13—90 வயதுக்குமேல் ஆகியிருந்த தானியேல் தீர்க்கதரிசியை ஒரு தேவதூதர் சந்தித்தார்; தானியேல் யெகோவாவுக்கு மிகவும் பிரியமானவர் என்றும், அவருடைய விசுவாசத்துக்குப் பலன் கிடைக்கும் என்றும் சொல்லி தானியேலைப் பலப்படுத்தினார்

    • லூ 1:5-13—வயதான சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் அற்புதமான விதத்தில் ஒரு மகனைக் கொடுத்து யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்

    • லூ 2:25-35—மேசியாவைக் குழந்தையாகப் பார்க்கும் பாக்கியத்தை வயதான சிமியோனுக்கு யெகோவா கொடுத்தார்; சிமியோன் மேசியாவைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொன்னார்

    • அப் 7:23, 30-36—இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை யெகோவா கொடுத்தபோது மோசேக்கு 80 வயது

யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும் வயதானவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?

லேவி 19:32; 1தீ 5:1

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 45:9-11; 47:12—வயதான தன்னுடைய அப்பா யாக்கோபை யோசேப்பு எகிப்துக்கு வரச் சொன்னார், யாக்கோபு இறந்துபோகும்வரை அவரைக் கவனித்துக்கொண்டார்

    • ரூ 1:14-17; 2:2, 17, 18, 23—வயதான நகோமிக்கு ரூத் தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் பக்கபலமாக இருந்தாள்

    • யோவா 19:26, 27—இறந்துபோவதற்குக் கொஞ்சம் முன்பு, வயதான தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இயேசு தன் அன்புச் சீஷர் யோவானிடம் ஒப்படைத்தார்

சபையில் இருக்கும் வயதானவர்களுக்கு நாம் என்னென்ன விதங்களில் உதவி செய்யலாம்?