Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்காணிகள்

கண்காணிகள்

கண்காணிகளாக ஆக விரும்புகிறவர்கள் என்னென்ன தகுதிகளை நியாயமான அளவுக்கு வளர்த்திருக்க வேண்டும்?

வேறு என்ன விதங்களில் கண்காணிகள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்?

உதவி ஊழியர்களாக ஆக விரும்புகிறவர்கள் என்னென்ன தகுதிகளை நியாயமான அளவுக்கு வளர்த்திருக்க வேண்டும்?

1தீ 3:8-10, 12, 13

இதையும் பாருங்கள்: கலா 6:10; 1தீ 4:15; தீத் 2:2, 6-8

கண்காணிகள் கடவுளுடைய சக்தியால்தான் நியமிக்கப்படுகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

அப் 20:28

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 13:2-5; 14:23—பயணக் கண்காணிகளான பவுலும் பர்னபாவும் சபைகளில் மூப்பர்களை நியமித்தார்கள்; இன்று வட்டாரக் கண்காணிகளும் அதையே செய்கிறார்கள்; ஒருவரை மூப்பராக நியமிப்பதற்கு முன்பு கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்கள், பைபிளில் மூப்பர்களுக்காகச் சொல்லப்பட்டிருக்கும் எல்லா தகுதிகளும் அவருக்கு இருக்கிறதா என்றும் கவனமாகப் பார்க்கிறார்கள்

    • தீத் 1:1, 5—தீத்து நிறைய சபைகளுக்குப் போய் அங்கே மூப்பர்களை நியமித்தார்

சபை யாருக்குச் சொந்தமானது, அதற்கு என்ன விலை கொடுக்கப்பட்டிருக்கிறது?

கண்காணிகளை அடிமைகள் என்றும், மற்றவர்களுக்குச் சேவை செய்கிறவர்கள் என்றும் பைபிள் ஏன் சொல்கிறது?

கண்காணிகள் ஏன் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும்?

பிலி 1:1; 2:5-8; 1தெ 2:6-8; 1பே 5:1-3, 5, 6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 20:17, 31-38—எபேசு சபையைச் சேர்ந்த மூப்பர்களை பவுல் வரவழைத்து, அந்தச் சபைக்காக எந்தளவு பாடுபட்டார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்; பவுலின் அன்புக்கும் பாசத்துக்கும் அவர்கள் நன்றி காட்டினார்கள்

“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” கொடுக்கும் வழிநடத்துதலைக் கிறிஸ்தவக் கண்காணிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

மூப்பர்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கான சிறந்த வழி என்ன?

1தீ 4:12; 1பே 5:2, 3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • நெ 5:14-16—ஆளுநரான நெகேமியா யெகோவாமேல் ரொம்பப் பயபக்தி காட்டினார்; அதனால், யெகோவாவின் மக்களை எந்த விதத்திலும் அவர் அடக்கி ஒடுக்கவில்லை; நியாயப்படி தனக்குச் சேர வேண்டியதைக்கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை

    • யோவா 13:12-15—மனத்தாழ்மை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதைத் தன் முன்மாதிரியின் மூலம் இயேசு தன் சீஷர்களுக்குச் சொல்லித்தந்தார்

ஒரு கிறிஸ்தவ மேய்ப்பர் சபையில் இருக்கும் ஒவ்வொருவர்மேலும் எப்படி அன்பும் அக்கறையும் காட்டலாம்?

ஆன்மீக விதத்தில் வியாதியாக இருக்கிறவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்கிறார்கள்?

கற்றுக்கொடுக்கும் விஷயத்தில் மூப்பர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

1தீ 1:3-7; 2தீ 2:16-18; தீத் 1:9

இதையும் பாருங்கள்: 2கொ 11:2-4

ஒழுக்க விஷயத்தில் சபை எப்போதுமே சுத்தமாக இருக்கும்படி மூப்பர்கள் ஏன் பார்த்துக்கொள்ள வேண்டும்?

மூப்பர்கள் யாருக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்?

2தீ 2:1, 2

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 10:5-20—பிரசங்க வேலை செய்ய அனுப்புவதற்கு முன்பு 12 அப்போஸ்தலர்களுக்கும் இயேசு பயிற்சி கொடுத்தார்

    • லூ 10:1-11—பிரசங்க வேலை செய்ய அனுப்புவதற்கு முன்பு 70 சீஷர்களுக்கு இயேசு முக்கியமான அறிவுரைகளைக் கொடுத்தார்

எல்லா பொறுப்புகளையும் செய்து முடிக்க மூப்பர்களுக்கு எது உதவும்?

1பே 5:1, 7

இதையும் பாருங்கள்: நீதி 3:5, 6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 3:9-12—யெகோவாவின் மக்களுக்கு நீதி வழங்க தனக்கு ஞானமும் புரிந்துகொள்ளுதலும் தரும்படி யெகோவாவிடம் சாலொமோன் ராஜா ஜெபம் செய்தார்

    • 2நா 19:4-7—யூதாவில் இருந்த நகரங்களில் யோசபாத் ராஜா நீதிபதிகளை நியமித்தார்; நீதி வழங்கும் பெரிய பொறுப்பைச் செய்யும்போது யெகோவா அவர்களோடு இருப்பார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்

கடவுளுக்கு உண்மையாக இருக்கும் கண்காணிகளைச் சபையில் இருப்பவர்கள் எப்படிப் பார்க்க வேண்டும்?

1தெ 5:12, 13; 1தீ 5:17; எபி 13:7, 17

இதையும் பாருங்கள்: எபே 4:8, 11, 12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 20:38—எபேசு சபையைச் சேர்ந்த மூப்பர்கள், அப்போஸ்தலன் பவுல்மேல் தாங்கள் வைத்திருந்த பாசத்தைக் காட்டத் தயங்கவில்லை

    • அப் 28:14-16—பவுல் ரோமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, அந்த நகரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கிட்டத்தட்ட 65 கிலோமீட்டர் (40 மைல்) தூரம் பயணம் செய்து, ‘அப்பியு சந்தையில்’ அவரைச் சந்தித்து, ரொம்ப உற்சாகப்படுத்தினார்கள்