Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோர்; அப்பா அம்மா

பெற்றோர்; அப்பா அம்மா

யெகோவா எதற்காகத் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்?

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எப்படிப் பார்க்க வேண்டும்?

சங் 127:3-5; 128:3

இதையும் பாருங்கள்: “பிள்ளைகள்; இளைஞர்கள்

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 33:4, 5—யாக்கோபு தன் பிள்ளைகளை யெகோவா தந்த பரிசாகப் பார்த்தார்

    • யாத் 1:15, 16, 22; 2:1-4; 6:20—அம்ராமுக்கும் யோகெபேத்துக்கும் மோசே பிறந்தார்; மோசேயைக் காப்பாற்ற தங்கள் உயிரைக் கொடுக்கக்கூட அவர்கள் தயாராக இருந்தார்கள்

பெற்றோருக்கு என்னென்ன கடமைகள் இருக்கின்றன?

உபா 6:6, 7; 11:18, 19; நீதி 22:6; 2கொ 12:14; 1தீ 5:8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 1:1-4—சீலோவில் நடந்த பண்டிகைகளுக்கு எல்க்கானா தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போனார்; தன்னுடைய எல்லா பிள்ளைகளுமே தன்னோடு சேர்ந்து யெகோவாவை வணங்கும்படி பார்த்துக்கொண்டார்

    • லூ 2:39, 41—ஒவ்வொரு வருஷமும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காக யோசேப்பும் மரியாளும் தங்கள் பிள்ளைகளோடு நாசரேத்திலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்

யெகோவாவுக்குக் கீழ்ப்படிய பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

நீதி 1:8, 9; 22:6

இதையும் பாருங்கள்: 2தீ 3:14, 15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 2:18-21, 26; 3:19—வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய சிறுவன் சாமுவேலின் பெற்றோர் அவனை அர்ப்பணித்துவிட்டார்கள்; ஆனாலும், வருஷா வருஷம் அவனைப் போய்ப் பார்த்து அவனுக்குத் தேவையானதைச் செய்தார்கள்; சாமுவேல் பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கு ரொம்பப் பிரியமானவனாக இருந்தான்

    • லூ 2:51, 52—தன் பெற்றோர் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தபோதும் இயேசு எப்போதும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்

பிள்ளைகளை வளர்ப்பதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றோர் எங்கே கண்டுபிடிக்கலாம்?

உபா 6:4-9; எபே 6:4; 2தீ 3:14-17

இதையும் பாருங்கள்: சங் 127:1; நீதி 16:3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • நியா 13:2-8—மனோவாவின் மனைவிக்கு அற்புதமாக ஒரு மகன் பிறப்பான் என்று ஒரு தேவதூதர் சொன்னார்; அந்தக் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கச் சொல்லி யெகோவாவிடம் மனோவா கெஞ்சினார்

    • சங் 78:3-8—பைபிளிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்

யெகோவாவை நேசிக்கிற ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் ஒரு பிள்ளை யெகோவாவைவிட்டு விலகிப்போக ஏன் வாய்ப்பு இருக்கிறது?

எசே 18:1-13, 20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 6:1-5; யூ 6—பரலோகத்தில் யெகோவாவோடு கோடிக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்திருந்தாலும் நிறைய தேவதூதர்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்

    • 1சா 8:1-3—சாமுவேல் தீர்க்கதரிசி ஒரு நீதிமானாக இருந்தார், யெகோவாவுக்கு உண்மையாக நடந்துகொண்டார்; ஆனால், அவருடைய மகன்கள் நேர்மையில்லாமல் நடந்துகொண்டார்கள், ஊழல் செய்தார்கள்

பெற்றோர் எந்தச் சமயத்திலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும்?

2தீ 3:15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • உபா 29:10-12, 29; 31:12; எஸ்றா 10:1—யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள இஸ்ரவேலர்கள் ஒன்றுகூடி வந்தபோது தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்

    • லூ 2:41-52—யோசேப்பும் மரியாளும் வருஷா வருஷம் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இயேசுவையும் தங்களுடைய மற்ற பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு எருசலேம் ஆலயத்துக்குப் போனார்கள்

மோசமான ஆட்களிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு யாருடைய முன்மாதிரியைப் பெற்றோர் பின்பற்ற வேண்டும்?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யாத் 19:4; உபா 32:11, 12—குஞ்சுகளைத் தூக்கி சுமந்து, பாதுகாத்து, கவனித்துக்கொள்ளும் ஒரு கழுகுக்கு யெகோவா தன்னை ஒப்பிடுகிறார்

    • ஏசா 49:15—பால் குடிக்கிற தன் குழந்தையை ஒரு தாய் எவ்வளவு கரிசனையோடு கவனித்துக்கொள்வாளோ அதைவிட அதிக கரிசனையோடு தன் ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதாகவும் பாதுகாப்பதாகவும் யெகோவா வாக்குக் கொடுக்கிறார்

    • மத் 2:1-16—குழந்தையாக இருந்த இயேசுவைத் தீர்த்துக்கட்ட சாத்தான் முயற்சி செய்தான்; அதற்காக வேறு தேசத்தைச் சேர்ந்த ஜோதிடர்களைப் பொல்லாத ராஜாவான ஏரோதுவிடம் அனுப்பி வைத்தான்; ஆனால், குடும்பத்தோடு எகிப்துக்குப் போகச் சொல்லி யெகோவா யோசேப்பிடம் சொன்னார்; இப்படி, தன் மகனைக் காப்பாற்றினார்

    • மத் 23:37—கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழ் கூட்டிச்சேர்த்து பாதுகாப்பதுபோல் தன் மக்களைப் பாதுகாக்க விரும்புவதாக இயேசு சொன்னார்

பெற்றோர் ஏன் தங்கள் பிள்ளைகளுக்கு செக்ஸைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும்?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லேவி 15:2, 3, 16, 18, 19; உபா 31:10-13—செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை யெகோவா திருச்சட்டத்தில் வெளிப்படையாகச் சொன்னார்; திருச்சட்டம் சத்தமாக வாசிக்கப்பட்டபோது பிள்ளைகளும் அதைக் கேட்க வேண்டுமென்று சொன்னார்

    • சங் 139:13-16—மனித உடலில் இனப்பெருக்க உறுப்புகளையும் மற்ற உறுப்புகளையும் அற்புதமாக வடிவமைத்ததற்காக யெகோவாவை தாவீது புகழ்ந்தார்

    • நீதி 2:10-15—யெகோவாவிடமிருந்து நமக்குக் கிடைக்கும் அறிவும் ஞானமும், படுமோசமான காரியங்களைச் செய்யும் போலித்தனமான ஆட்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும்

பெற்றோர் ஏன் தங்கள் பிள்ளைகளை அன்பான விதத்தில் கண்டித்துத் திருத்த வேண்டும்?

நீதி 13:24; 29:17; எரே 30:11; எபே 6:4

இதையும் பாருங்கள்: சங் 25:8; 145:9; கொலோ 3:21

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 32:1-5—தாவீது பாவம் செய்தபோது யெகோவாவினால் தண்டிக்கப்பட்டார்; ஆனால், உண்மையிலேயே மனம் திருந்துகிறவர்களை யெகோவா மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டபோது ஆறுதல் அடைந்தார்

    • யோனா 4:1-11—யோனா தீர்க்கதரிசி யெகோவாவிடம் கோபமாகவும் மரியாதை இல்லாமலும் பேசினார்; ஆனாலும், யெகோவா பொறுமையாக அவருக்கு இரக்கத்தைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்தார்

அன்பினால்தான் பிள்ளைகளைப் பெற்றோர் கண்டித்துத் திருத்துகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

நீதி 3:11, 12; 13:24

இதையும் பாருங்கள்: நீதி 15:32; வெளி 3:19