Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்புறுத்தல்

துன்புறுத்தல்

துன்புறுத்தல் வரும் என்று கிறிஸ்தவர்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?

துன்புறுத்தப்படும்போது நாம் ஏன் யெகோவாவிடம் பலம் கேட்க வேண்டும்?

சங் 55:22; 2கொ 12:9, 10; 2தீ 4:16-18; எபி 13:6

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 19:1-18—துன்புறுத்தப்பட்டபோது எலியா தீர்க்கதரிசி தன் மனதில் இருந்ததையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார், யெகோவா அவருக்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் தந்தார்

    • அப் 7:9-15—யோசேப்பை அவருடைய அண்ணன்கள் துன்புறுத்தினார்கள்; ஆனால் யெகோவா அவர்கூடவே இருந்து அவரைக் காப்பாற்றினார், அவர் மூலம் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றினார்

என்னென்ன விதங்களில் துன்புறுத்தல் வரலாம்?

வார்த்தைகளால் தாக்கப்படுவது

2நா 36:16; மத் 5:11; அப் 19:9; 1பே 4:4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2ரா 18:17-35—அசீரிய ராஜாவின் பிரதிநிதியாக வந்த ரப்சாக்கே யெகோவாவையும் அவருடைய மக்களையும் பழித்துப் பேசினான்

    • லூ 22:63-65; 23:35-37—இயேசு காவலில் வைக்கப்பட்டிருந்த சமயத்திலும், சித்திரவதைக் கம்பத்தில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் எதிரிகள் அவரைக் கேலி செய்தார்கள், பழித்துப் பேசினார்கள்

குடும்பத்தாரின் எதிர்ப்பு

கைது செய்யப்படுவதும், அதிகாரிகள்முன் நிறுத்தப்படுவதும்

அடிக்கப்படுவது

கும்பலால் தாக்கப்படுவது

கொலை செய்யப்படுவது

துன்புறுத்தப்படும்போது கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மத் 5:44; அப் 16:25; 1கொ 4:12, 13; 1பே 2:23

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 7:57–8:1—எதிரிகளின் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தபோது, அவர்களை மன்னிக்கச் சொல்லி ஸ்தேவான் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்; அந்த எதிரிகளில் தர்சுவைச் சேர்ந்த சவுலும் ஒருவர்

    • அப் 16:22-34—பவுல் அடிக்கப்பட்டு தொழுமரங்களில் பூட்டி வைக்கப்பட்டபோதும் சிறைக்காவலனிடம் அன்போடு நடந்துகொண்டார்; அதனால், அவனும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கிறிஸ்தவர்களானார்கள்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலருக்கு என்ன நடந்தது?

துன்புறுத்தலை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

நமக்கு இருக்கும் எதிர்கால நம்பிக்கை துன்புறுத்தலைத் தாங்கிக்கொள்ள எப்படி உதவும்?

துன்புறுத்தலை நினைத்து நாம் ஏன் அவமானப்படவோ பயப்படவோ சோர்ந்துபோகவோ கூடாது, யெகோவாவுக்குச் சேவை செய்வதை ஏன் நிறுத்தவும் கூடாது?

சங் 56:1-4; அப் 4:18-20; 2தீ 1:8, 12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 32:1-22—சனகெரிப் ராஜா ஒரு பெரிய படையோடு எருசலேமைத் தாக்க வந்தபோது எசேக்கியா ராஜா யெகோவாவிடம் உதவி கேட்டார், தன் மக்களைப் பலப்படுத்தினார்; அதனால், யெகோவா அவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்

    • எபி 12:1-3—இயேசுவை அவமானப்படுத்த எதிரிகள் முயற்சி செய்தார்கள், ஆனால் அவர் அந்த அவமானத்தைப் பொருட்படுத்தவில்லை, எந்த விதத்திலும் சோர்ந்துபோகவும் இல்லை

துன்புறுத்தலைத் தாங்கிக்கொள்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

சோதனையை நாம் சகித்துக்கொள்ளும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார், அவருடைய பெயருக்குப் புகழ் சேர்கிறது

1பே 2:19, 20; 4:12-16

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோபு 1:6-22; 2:1-10—சாத்தான்தான் தன்னைப் பயங்கரமாகத் துன்புறுத்துகிறான் என்று தெரியாதபோதும் யோபு யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார்; இப்படி, சாத்தான் ஒரு பொய்யன் என்று நிரூபித்து, கடவுளுக்கு மகிமை சேர்த்தார்

    • தானி 1:6, 7; 3:8-30—யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போவதைவிட சாவதே மேல் என்று அனனியாவும், மீஷாவேலும், அசரியாவும் (சாத்ராக்கும், மேஷாக்கும், ஆபேத்நேகோவும்) முடிவு செய்தார்கள்; அதன் விளைவாக, நேபுகாத்நேச்சார் ராஜா எல்லாருக்கும் முன்னால் யெகோவாவைப் புகழ்ந்தான்

துன்புறுத்தல் மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பைத் தரலாம்

லூ 21:12, 13; அப் 8:1, 4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 11:19-21—துன்புறுத்தலால் கிறிஸ்தவர்கள் சிதறிப்போனார்கள்; போன இடங்களிலெல்லாம் தொடர்ந்து நல்ல செய்தியைப் பரப்பினார்கள்

    • பிலி 1:12, 13—தான் சிறையில் அடைக்கப்பட்டது நல்ல செய்தி பரவுவதற்கு உதவியாக இருந்ததை நினைத்து பவுல் சந்தோஷப்பட்டார்

துன்புறுத்தலை நாம் சகித்துக்கொண்டால் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த முடியும்

யெகோவாவின் ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதற்குப் பொதுவாக மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் எப்படிக் காரணமாக இருக்கிறார்கள்?

எரே 26:11; மாற் 3:6; யோவா 11:47, 48, 53; அப் 25:1-3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 19:24-29—எபேசுவில் அர்த்தமி கோயிலின் உருவங்களை விற்ற சில கைத்தொழிலாளிகள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்கள்; ஏனென்றால், கிறிஸ்தவர்கள் பிரசங்கித்த செய்தியால் தங்கள் தொழிலுக்கு நஷ்டம் வரும் என்று நினைத்தார்கள்

    • கலா 1:13, 14—கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு பவுல் (சவுல்) யூத மதவெறியராக இருந்தார்; அதனால், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்

யெகோவாவின் ஊழியர்களுக்கு வரும் துன்புறுத்தலுக்குப் பின்னால் இருப்பது யார்?