Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது

நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது

ஏன் உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறார்கள்?

மத் 28:19, 20; ரோ 10:9, 10; எபி 13:15

இதையும் பாருங்கள்: அப் 1:8; 1கொ 9:16

நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது இயேசுவுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது?

லூ 8:1; யோவா 18:37

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 4:42-44—பிரசங்கிப்பதற்காகத்தான் இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்டதாக இயேசு சொன்னார்

    • யோவா 4:31-34—நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது தனக்கு உணவுபோல் இருப்பதாக இயேசு சொன்னார்

சபையில் அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு மட்டும்தான் பிரசங்கிக்கும் பொறுப்பு இருக்கிறதா?

சங் 68:11; 148:12, 13; அப் 2:17, 18

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2ரா 5:1-4, 13, 14, 17—ஒரு இஸ்ரவேலச் சிறுமி தன் எஜமானியிடம் யெகோவாவின் தீர்க்கதரிசியான எலிசாவைப் பற்றிச் சொன்னாள்

    • மத் 21:15, 16—சிறுவர்கள் இயேசுவைப் புகழ்ந்தபோது முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் கோபப்பட்டார்கள், ஆனால் அவர்களுடைய எண்ணம் தவறு என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்

நல்ல செய்தியைப் பிரசங்கிக்க சபையில் இருக்கிறவர்களுக்குக் கிறிஸ்தவக் கண்காணிகள் எப்படிக் கற்றுத்தரலாம்?

பிரசங்க வேலையைச் செய்ய யெகோவாவும் இயேசுவும் எப்படி நமக்கு உதவி செய்கிறார்கள்?

2கொ 4:7; பிலி 4:13; 2தீ 4:17

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 16:12, 22-24; 1தெ 2:1, 2—பவுலும் அவருடைய நண்பர்களும் துன்புறுத்தப்பட்டபோதுகூட, கடவுளுடைய உதவியோடு தொடர்ந்து தைரியமாகப் பிரசங்கித்தார்கள்

    • 2கொ 12:7-9—ஓயாமல் பிரசங்கித்த பவுலின் “உடலில் ஒரு முள்” குத்திக்கொண்டிருந்தது; ஏதாவது ஒரு உடல்நலப் பிரச்சினையாக அது இருந்திருக்கலாம்; ஆனாலும், தொடர்ந்து பிரசங்கிக்க யெகோவா அவருக்குப் பலம் கொடுத்தார்

பிரசங்கிக்கும் தகுதியை ஒரு கிறிஸ்தவருக்குக் கொடுப்பது யார் அல்லது எது?

1கொ 1:26-28; 2கொ 3:5; 4:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோவா 7:15—ரபீக்களுடைய பள்ளிகளில் படிக்காமலேயே இயேசு வேதவசனங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்

    • அப் 4:13—இயேசுவின் அப்போஸ்தலர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள் என்று மக்கள் நினைத்தார்கள்; ஆனாலும், அப்போஸ்தலர்கள் பக்திவைராக்கியத்தோடும் தைரியத்தோடும் பிரசங்கித்தார்கள்

பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் செய்ய நாம் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என எப்படிச் சொல்லலாம்?

மாற் 1:17; லூ 8:1; எபே 4:11, 12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஏசா 50:4, 5—இந்தப் பூமிக்கு வருவதற்குமுன் மேசியாவுக்கு யெகோவாவே பயிற்சி கொடுத்தார்

    • மத் 10:5-7—இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, பிரசங்க வேலையைச் செய்ய தன் சீஷர்களுக்குப் பொறுமையோடு பயிற்சி கொடுத்தார்

பிரசங்க வேலையை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது நாம் எப்படி உணருகிறோம்?

பிரசங்கிக்கும்போது என்னென்ன விஷயங்களைப் பற்றி நாம் பேசுகிறோம்?

பொய்ப் போதனைகளை நாம் ஏன் வெட்டவெளிச்சமாக்குகிறோம்?

2கொ 10:4, 5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மாற் 12:18-27—உயிர்த்தெழுதலை நம்பாமல் இருப்பது தவறு என்பதை சதுசேயர்களுக்கு நிரூபிக்க இயேசு வசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்

    • அப் 17:16, 17, 29, 30—சிலைகளை வணங்குவது தவறு என்பதைக் காட்ட அத்தேனே நகர மக்களிடம் பவுல் நியாயங்காட்டிப் பேசினார்

பிரசங்க வேலையை நாம் எப்படிச் செய்கிறோம்?

நாம் ஏன் பொது இடங்களில் பிரசங்கிக்கிறோம்?

யோவா 18:20; அப் 16:13; 17:17; 18:4

இதையும் பாருங்கள்: நீதி 1:20, 21

பிரசங்கிக்கும் விஷயத்தில் நமக்கு ஏன் பொறுமையும் விடாமுயற்சியும் தேவை?

பிரசங்க வேலையால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?

எல்லா சந்தர்ப்பங்களிலும் சாட்சி கொடுக்க நாம் ஏன் தயாராக இருக்க வேண்டும்?

1கொ 9:23; 1தீ 2:4; 1பே 3:15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோவா 4:6, 7, 13, 14—இயேசு களைப்பாக இருந்தபோதும், தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு வந்த சமாரியப் பெண்ணிடம் சாட்சி கொடுத்தார்

    • பிலி 1:12-14—விசுவாசத்துக்காகக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில்கூட, பவுல் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் சாட்சி கொடுத்தார், அவர்களை உற்சாகப்படுத்தினார்

எல்லாருமே நாம் சொல்லும் செய்தியைக் கேட்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

யோவா 10:25, 26; 15:18-20; அப் 28:23-28

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எரே 7:23-26—தீர்க்கதரிசிகளைத் திரும்பத் திரும்ப அனுப்பியும் அவர்கள் சொன்னதைத் தன் மக்கள் கேட்காமல்போனதைப் பற்றி எரேமியா மூலம் யெகோவா விளக்கினார்

    • மத் 13:10-16—ஏசாயாவின் காலத்தைப் போலவே நிறைய பேர் நம் செய்தியைக் கேட்பார்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசு விளக்கினார்

நாம் சொல்வதைக் கேட்க நிறைய பேருக்கு நேரமே இல்லாததைப் பார்க்கும்போது நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை?

சிலர் ஆரம்பத்தில் மட்டும்தான் ஆர்வம் காட்டுவார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

பிரசங்க வேலையைச் சிலர் நேரடியாக எதிர்க்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க எந்த உதாரணங்கள் நமக்கு உதவுகின்றன?

பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு வரும்போது நாம் என்ன செய்கிறோம்?

சிலர் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

நல்ல செய்தியைத் தெரிந்து வைத்திருப்பவர்களிடம் கடவுள் என்ன எதிர்பார்க்கிறார்?

அப் 20:26, 27; 1கொ 9:16, 17; 1தீ 4:16

இதையும் பாருங்கள்: எசே 33:8

எல்லா மதங்களையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்த மக்களிடம் நாம் ஏன் பிரசங்கிக்க வேண்டும்?

மத் 24:14; அப் 10:34, 35; வெளி 14:6

இதையும் பாருங்கள்: சங் 49:1, 2

வாரத்தின் எந்த நாளிலும் நாம் பிரசங்கிக்கலாமா? ஓய்வுநாளிலும் பிரசங்கிக்கலாமா?

மக்கள் பைபிளை வைத்திருந்தாலும்கூட, ஒரு மதத்தில் இருந்தாலும்கூட, அவர்கள் எல்லாரிடமுமே நாம் பிரசங்கிக்க வேண்டும் என்பதை எந்த உதாரணங்கள் காட்டுகின்றன?